ரஜினியின் ‘காலா’வுடன் இணைந்த மற்றொரு பிரபல நிறுவனம்!

ரஜினியின் ‘காலா’வின் டிஜிட்டல் உரிமையை அமேசான் நிறுவனம் கைபற்றியது!

செய்திகள் 24-May-2018 10:35 AM IST VRC கருத்துக்கள்

பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த், நானா படேகர், ஹுமா குரேஷி, ஈஸ்வரி ராவ் முதலானோர் நடித்துள்ள ‘காலா’ ஜூன் 7-ஆம் தேதி உலம் முழுக்க வெளியாகிறது. ‘கபாலி’ படத்தை தொடர்ந்து பா.ரஞ்சித்தும், ரஜினியும் இரண்டாவது முறையாக இணைந்துள்ள இப்படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இதனால் ‘காலா’வின் வியாபார விஷயங்களும் சூடுபிடித்துள்ள நிலையில் இப்படத்தின் அனைத்து மொழி சாட்லைட் உரிமையையும் ஸ்டார் குரூப் (விஜய் டிவி) நிறுவனம் கைபற்றியது. இதனை தொடர்ந்து இப்போது இப்படத்தை டிஜிட்டல் மூலம் திரையிடப்படும் உரிமையை அமேசான் நிறுவனம் கைபற்றியுள்ளது என்ற தகவல் கிடைத்துள்ளது. இதன் மூலம் ‘காலா’ மற்றுமொரு பெரிய நிறுவத்துடன் கைகோர்த்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. த்னுஷின் வுண்டர்பார் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள ‘காலா’வுக்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார்.

#Kaala #Rajinikanth #HumaQuerishi #PaRanjith #SanthoshNarayanan

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பேட்ட ட்ரைலர்


;