சூப்பர்ஸ்டாரின் 2.0 ஸ்டைலில் உருவாகும் அஞ்சலியின் ‘லிசா’

அஞ்சலி நடிக்கும் புதியமான ‘லிசா’ பற்றிய அதிகாரபூர்வ தகவல்கள்

செய்திகள் 22-May-2018 11:44 AM IST Chandru கருத்துக்கள்

அஞ்சலி தற்போத நடித்துக் கொண்டிருக்கும் அரை டஜன் படங்களின் பட்டியலில் லேட்டஸ்ட்டாக சேர்ந்திருப்பது ‘லிசா’. ‘இந்தியாவின் முதல் ஸ்டீரியோகிராஃபிக் 3டி ஹாரர் ஃபிலிம்’ என்ற டேக் லைனுடன் வெளிவந்துள்ள இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அறிமுக இயக்குனர் ராஜு விஸ்வநாத் இப்படத்தை இயக்கி வருகிறது. இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்து படத்தையும் தன் சொந்த பேனரில் தயாரிக்கிறார் பி.ஜி.முத்தையா.

ரஜினியின் ‘2.0’ படம்போலவே முழுக்க முழுக்க 3டி கேமராவிலேயே படமாக்கப்படுகிறதாம் ‘லிசா’. இதற்காக 2.0வில் பயன்படுத்திய அதே ‘ரிக்’கையே ‘லிசா’ படக்குழுவினரும் பயன்படுத்துகிறார்களாம். தமிழ், தெலுங்கு என ஒரே நேரத்தில் இரண்டு மொழிகளில் உருவாகும் இப்படம் ஹிந்தியிலும் ‘டப்’ செய்யப்படவிருக்கிறதாம். அஞ்சலி மாடர்ன் கேர்ளாக நடிக்கும் இப்படத்தின் ஆரம்பகட்ட படப்பிடிப்பு தற்போது முடிவடைந்துவிட்டது. அடுத்தமாதம் இப்படத்தின் சில காட்சிகள் ஹைதராபாத்தில் படமாக்கப்பவிருக்கிறது. அதனைத் தொடர்ந்து படத்தின் முக்கியமான காட்சிகளுக்காக கொடைக்கானலுக்குச் செல்லவிருக்கிறதாம் ‘லிசா’ டீம்!

#Lisa #Anjali #PGMuthaiah

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பேரன்பு டீஸர்


;