இதுவரை யாரும் படம் பிடிக்காத லொகேஷனில் ’பியார் பிரேமா காதல்’

ஹரிஷ் கல்யாண் நடிக்கும் ‘பியார் பிரேமா காதல்’ படத்தின் அனைத்து படப்பிடிப்பும் முடிந்துவிட்டது!

செய்திகள் 22-May-2018 10:49 AM IST VRC கருத்துக்கள்

யுவன் சங்கர் ராஜா இசை அமைத்து தயாரித்து வரும் படம் ‘பியார் பிரேமா காதல்’. அறிமுக இயக்குனர் இலன் இயக்கி வரும் இந்த படத்தில் ஹரிஷ் கல்யாண் கதாநாயகனாக நடிக்க, ரைசா வில்சன் கதாநாயகியாக நடிக்கிறார். இதுவரை எந்த தமிழ் படத்தின் படப்பிடிப்பும் நடைபெறாத ஒரு இடத்தில் இந்த படத்தின் பாடல் காட்சிகளை படமாக்க வேண்டும் இப்படக்குழுவினர் அசர்பேஜான் என்ற நாட்டுக்கு சென்று ஒரு காதல் பாடலை படமாக்கி வந்துள்ளார்கள். காதல் தேசம் போன்று காட்சி அளைக்கும் இந்த இடத்தில் படமாக்கப்பட்டுள்ள பாடல் இப்படத்தில் ஒரு முக்கியமான பாடலாக இருக்கும் என்று கூறியுள்ளார் இந்த படத்தின் தயாரிப்பாளரும் இசை அமைப்பாளருமான யுவன் சங்கர் ராஜா. யுவன் சங்கர் ராஜாவின் ’YSR FILMS’ மற்றும் ‘K PRODUCTIONS’ நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு ராஜு பட்டச்சார்ஜி ஒளிப்பதிவு செய்துள்ளார். முத்துக்குமரன் படத்தொகுப்பு செய்கிறார்,. இந்த படத்தின் அனைத்து படப்பிடிப்பு வேலைகளும் முடிவடைந்து இப்போது படத்தின் இறுதிகட்ட வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. .

#PyarPremaKadhal #PPK #HarishKalyan #RaizaWilson #Elan #YuvanShankarRaja

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

வர்மா ட்ரைலர்


;