விஜய் ஆண்டனி படத்தில் அர்ஜுன்?

விஷாலின் ‘இரும்புத்திரை’யை தொடர்ந்து விஜய் ஆண்டனியின்  ‘கொலைக்காரனி’ல் விஜய் ஆண்டனி?

செய்திகள் 15-May-2018 11:37 AM IST VRC கருத்துக்கள்

விஜய் ஆண்டனி நடித்துள்ள ‘காளி’ வருகிற 11-ஆம் வெளியாகிறது. இந்த படத்தை தொடர்ந்து விஜய் ஆண்டனி தனது அடுத்த படங்களாக ‘திமிரு பிடிச்சவன்’, ‘கொலைக்காரன்’, ‘திருடன்’, மற்றும் ‘மூடர்கூடம்’ நவீன் இயக்கத்தில் ஒரு படம் முதலான படங்களில் நடிக்கிறார். இதில் ‘திமிரு பிடிச்சவன்’ படத்தை எஸ்.எஸ்.ராஜமௌலியின் சிஷ்யர் கணேஷா இயக்குகிறார். ‘கொலைகாரன்’ படத்தை ஆண்ட்ரூ இயக்குகிறார். ‘கொலைகாரன்’ படம் குறித்த லேட்டஸ்ட் தகவலாக இதில் அர்ஜுனும் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கிறார் என்று கூறப்படுகிறது. சமீபத்தில் வெளியான விஷாலின் ‘இரும்புத்திரை’ படத்தில் அர்ஜுன் வில்லனாக நடித்துள்ளார் என்பதும் இந்த கேரக்டர் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்று இப்படம் வெற்றிப் படமாகவும் அமைந்திருப்பதால அர்ஜுனுக்கு நிறைய பட வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறது என்றும் அதில் விஜய் ஆண்டனியின் ‘கொலைகாரனி’ல் நடிக்க அர்ஜுன் சம்மதம் தெரிவித்துள்ளார் என்றும் கூறப்படுகிறது. ஆனால் இது குறித்த எந்த அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

#Arjun #VijayAntony #Irumbuthirai #Vishal

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஆக்‌ஷன் ட்ரைலர்


;