ஜீனியஸ் மாஸ்டரிடம் நிறைய பாடங்களை கற்றுகொண்டேன்! - அருண் விஜய்

மணிரத்னம் இயக்கத்தில் ’செக்க சிவந்த வானம்’ படத்தில் நடித்தது குறித்து அருண் விஜய்!

செய்திகள் 14-May-2018 4:03 PM IST VRC கருத்துக்கள்

மணிரத்னம் இயக்கி வரும் ‘செக்க சிவந்த வானம்’ படத்தில் விஜய்சேதுபதி, அருண் விஜய், சிம்பு, ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதி முதலானோர் நடிக்கிறார்கள். இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தில் எட்டியுள்ள்து. இந்நிலையில் இந்த படத்தில் அருண் விஜய் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு முடிந்து விட்டதை தொடர்ந்து இப்படத்தில் மணிரத்னம இயக்கத்தில் நடித்தது குறித்து அருண் விஜய் ட்வீட் செய்திருப்பதில், ‘‘ஒரு மாணவனாக ஜீனியஸான ஒரு மாஸ்டரிடம் நிறைய பாடங்களை கற்றுக்கொண்டேன். மணிரத்னம் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக காத்திருந்த எனக்கு அதற்கான பலன் இப்போது கிடைத்துள்ளது. ’செக்க சிவந்த வானம்’ படத்தில் நடித்தது மறக்க முடியாத அனுபவம்’’ என்று குறிப்பிட்டுள்ளார் அருண் விஜய்!

#CCV #ChekkaChivandhaVaanam #ArunVijay

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தடம் - teaser


;