7 சீனியர் நடிகர்கள் இணைந்து நடிக்கும் படம்!

அறிமுக இயக்குனர் விவி இயக்கத்தில்  7 சீனியர் நடிகர்கள் நடிக்கும் படம்  ‘நரை’

செய்திகள் 9-May-2018 12:30 PM IST VRC கருத்துக்கள்

சங்கிலி முருகன், சந்தானபாரதி, ஜூனியர் பாலையா, நளினிகாந்த், ஞானவேல், அழகு, விஜய்கிருஷ்ணராஜ் ஆகிய சீனியர் நடிகர்களுடன் புதுமுகம் ரோஹித் கதாநாயக்னாக நடிக்க, ஈடன், லீமா ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கும் படம் ‘நரை’. ‘K7 Studios’ என்ற பட நிறுவனம் சார்பில் பி.கேசவன், டாக்டர் ஹேமா சரவணன் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்தை அறிமுக இயக்குனர் விவி இயக்கியுள்ளார்.

‘‘வெவ்வேறு காரணங்களுக்காக குடும்பத்தினரால் ஒதுக்கப்பட்ட ஏழு முதியவர்கள், ஆதரவற்றோர் இல்லத்தில் வாழ்ந்து வருகிறார்கள். அப்போது நடக்கும் ஒரு அதிர்ச்சியான சம்பவம்ம் அந்த 7 முதியவர்களின் வாழ்க்கையை தலைகீழாக மாற்றிப் போடுகிறது. அந்த சம்பவம் என்ன? அந்த சம்பவத்திற்கும் அந்த முதியவர்களுக்கும் சம்பந்தம் இருக்கிறதா? இது போன்ற கேள்விகளுக்கு பல திருப்பங்களுடன், விறுவிறுப்பான திரைக்கதையோடு பதில்களை தரும் படமாக உருவாகியுள்ளது ‘நரை’ என்கிறார் இப்படத்தின் இயக்குனர் விவி.

படப்பிடிப்பு வேலைகள் முடிவடைந்து ரிலீஸுக்கு தயாராகி வரும் இந்த படத்திற்கு அனிருத் விஜய் இசை அமைக்கிறார். சினு சித்தார்த் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தின் டீஸர் வெளியிட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. அப்போது இந்த படத்தில் நடித்திருக்கும் சங்கிலி முருகன் பேசும்போது, ‘இப்போது வருகிற சில படங்கள் ரசிகனுக்கு புரிவதே இல்லை! அப்படி இருக்கும் இந்த காலகட்டத்தில் அருமையான ஒரு கதையை வைத்து இந்த படத்தை இயக்கியுள்ளார் விவி. இந்த படம் நிச்சயம் வெற்றிப் படமாக அமையும்’ என்றார்.

இவரை தொடர்ந்து தயாரிப்பாளரும் நடிகருமான ஆர்.கே.சுரேஷ், ‘அம்மா கிரியேஷன்ஸ்’ டி.சிவா முதலானோரும் ‘நரை’ படம் பற்றி பேசினார்கள்.

#SangiliMurugan #SanthanaBharathi #VV #K7Studios #Narai #AniruthVijay

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சத்யா - யவனா வீடியோ சாங்


;