‘CCV’ குறித்து அரவிந்த்சாமி முக்கிய ட்வீட்!

’செக்க சிவந்த வானம்’ படப்பிடிப்பை முடித்த அரவிந்த்சாமி

செய்திகள் 7-May-2018 11:07 AM IST VRC கருத்துக்கள்

மணிரத்னம் இயக்கி வரும் படம் ‘செக்க சிவந்த வானம்’. இந்த படத்தில் அரவிந்த்சாமி, விஜய்சேதுபதி, அருண்விஜய், சிம்பு, ஜோதிகா, அதிதி, ஐஸ்வர்யா ராஜேஷ் என நிறைய நட்சத்திரங்கள் நடித்து வருகிறார்கள். ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் இந்த படத்தில் அரவிந்த்சாமி சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு முடிந்து விட்டது என்பதை அரவிந்த்சாமி அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். இது குறித்து அரவிந்த் சாமி ட்வீட் செய்திருப்பதில், ‘செக்க சிவந்த வானம்’ படத்தில் என்னுடைய படப்பிடிப்பு முடிந்து விட்டது! ஓரிரு நாட்கள் ஓய்வெடுத்த பிறகு இம்மாதம் 11-ஆம் தேதி வெளியாகவிருக்கிற ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ பட புரொமோஷன் வேலைகளில் ஈடுபடவிருக்கிறேன்’’ என்று குறிப்பிட்டுள்ளார். மலையாள இயக்குனர் சித்திக் இயக்கத்தில் அரவிந்தசாமி, அம்லாபால், நைனிகா முக்கிய பாத்திரங்களில் நடிக்கும் ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ மலையாளத்தில் மம்முட்டி, நயன்தாரா நடிப்பில் வெளியாகி வெற்றிபெற்ற ‘பாஸ்கர் தி ராஸ்கல்’ படத்தின் ரீ-மேக்காகும்!

#CCV #ChekkaChivandhaVaanam #AravindSamy #STR #ArunVijay #ArRahman #ManiRathnam

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

செக்க சிவந்த வானம் ட்ரைலர் - 2


;