சிவகார்த்திகேயனுடன் முதன் முதலாக இணையும் பிரபல காமெடி நடிகர்!

சிவகார்த்திகேயன் முதன் முதலாக இணையும் காமெடி நடிகர் கருணாகரன்!

செய்திகள் 3-Apr-2018 10:50 AM IST VRC கருத்துக்கள்

ஆர்.ரவிகுமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் சிவகார்த்திகேயனின் 13-வது படத்தின் படப்பிடிப்பு மிக விரைவில் துவங்கவிருக்கிறது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடிக்க இருக்கிறார் என்றும், இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கவிருக்கிறார் என்றும் தகவல்களை ஏற்கெனவே வெளியிட்டிருந்தோம்! ‘24 AM STUDIOS’ நிறுவனம் சார்பில் ஆர்.டி.ராஜா தயாரிக்கும் இந்த படத்திற்கான மற்ற நடிகர், நடிகைகள் தேர்வு நடந்து வரும் நிலையில காமெடி மற்றும் குணச்சித்திர நடிகரான கருணாகரன் இப்படத்தின் ஒரு முக்கிய கேரக்டருக்காக தேர்வாகியுள்ளார்! ரவிகுமார் இயக்கிய ‘இன்று நேற்று நாளை’ படத்தில் கருணாகரன் நடித்துள்ளார். ஆனால் சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடித்ததில்லை. இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தின் மூலம் சிவகார்த்திகேயனுடன் முதன் முதலாக இணைகிறார் கருணாகரன்.

#SivaKarthikeyan #Karunakaran #SK13 #SeemaRaja #Ravikumar #ARRahman

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

அயோக்யா ட்ரைலர்


;