ஆர்.கே.சுரேஷின் அடுத்த பட அறிவிப்பு!

‘பில்லா பாண்டி’,  ‘வேட்டை நாய்’ படங்களை தொடர்ந்து ஆர்.கே.சுரேஷ் கதாநாயகனாக நடிக்கும் படம் ‘டைசன்’

செய்திகள் 12-Mar-2018 2:58 PM IST VRC கருத்துக்கள்

சமீபத்தில் வெளியான ‘அட்டு’ படத்தை இயக்கிய ரத்தனலிங்கா அடுத்து இயக்கும் படத்திற்கு ‘டைசன்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் ஆர்.கே.சுரேஷ் கதாநாயகனாக நடிக்கிறார். ‘பில்லா பாண்டி’, ‘வேட்டை நாய்’ ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்து வரும் ஆர்.கே.சுரேஷ், சில படங்களில் வில்லன், குணச்சித்திர வேடங்களிலும் நடித்து வருகிறார். ‘பில்லா பாண்டி’ ‘வேட்டை நாய்’ படங்களை தொடர்ந்து ‘டைசன்’ படத்திலும் ஆர்.கே.சுரேஷுக்கு மாறுபட்ட கேரக்டராம். இந்த படத்தில் ஆர்.கே.சுரேஷுடன் ‘அஃகு’ படத்தில் கதாநாயகனாக நடித்த அஜய் இரண்டு வேறுபட்ட கேரக்டர்களில் நடிக்க இருக்கிறாரம். இவர்களுடன் மேலும் சில முன்னணி நடிகர் நடிகைகள் நடிக்க இருக்கும் இந்த படத்தை ஆர்.கே.சுரேஷின் ‘ஸ்டுடியோ 9’ நிறுவனம் தயாரிக்கிறது.

#RkSuresh #Rathnalinga #Vettai #BillaPandi #VettaiNai

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பில்லா பாண்டி ட்ரைலர்


;