தெலுங்கில் வெற்றிப் படமாக அமைந்த ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தை தமிழில் ‘வர்மா’ என்ற பெயரில் ரீ-மேக் செய்து இயக்கி வருகிறார் பாலா. இதில் விக்ரம் மகன் துருவ் கதாநாயகனாக நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நேபால், காத்மண்டுவில் துவங்கியது. இந்த படத்திற்கான கதாநாயகி தேடுதல் வேட்டையில் ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தில் நடித்த ஷாலினி பாண்டே உட்பட பல பேரின் பெயர்கள் அடிப்பட்டது. ஆனால் இப்போது முன்னாள் கதாநாயகி நடிகையான கௌதமியின் மகள் சுப்பு லட்சுமி ‘வர்மா’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகவிருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இது குறித்த எந்த அதிகாரபூர்வ தகவலையும் படக்குழுவினர் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
#Gauthami #Dhruv #ArjunReddy #Subbulakshmi #Varma
‘வாயை மூடி பேசவும்’, ‘ஒகே கண்மணி’, ‘சோலோ’ ஆகிய படங்களுக்கு பிறகு துல்கர் சல்மான் நடிப்பில் வெளியாக...
‘வாயை மூடி பேசவும்’, ‘ஒகே கண்மணி’, ‘சோலோ’ ஆகிய படங்களுக்கு பிறகு துல்கர் சல்மான் நடிக்கும் நேரடி...
மணிரத்னத்தின் கனவு திரைப்படமான ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கி...