அபி சரவணன் நடிக்கும் ஹாரர் படம்!

அபிசரவணன், அறிமுகம் வினோலியா நடிக்கும் ஹாரர் படம் ‘வெற்றிமாறன்’

செய்திகள் 6-Mar-2018 8:11 PM IST VRC கருத்துக்கள்

‘டூரிங் டாக்கீஸ்’, ‘பட்டதாரி’ உட்பட சில படங்களில் நடித்துள்ள அபிசரவணன் நடிக்கும் படம் ‘வெற்றிமாறன்’. அறிமுக இயக்குனர் மனோ இயக்கும் இந்த படத்தில் அபிசரவணனுக்கு ஜோடியாக வினோலியா என்ற புதுமுகம் நடிக்கிறார். ஹாரர் ரக படமாக உருவாகி வரும் இந்த படத்தை ‘லுலு கிரியேஷன்ஸ்’ சார்பில் எம்.எஸ்.சுல்பிகர் தயாரிக்கிறார்.

இறைவனின் படைப்பில் அனைத்து உயிரனங்களும் தங்களுக்கு விதிக்கப்பட்ட வாழ்க்கை முறையை வாழ்கின்றன. ஆனால் மனிதன் மட்டும் தான் தனது இயல்பு வாழ்க்கைக்கு முரணாக வாழ விரும்புகிறான். இப்படி வாழ்ந்து வரும் ஒரு மனிதன் காதலால் பாதிக்கப்பட, அதனை தொடர்ந்து நடக்கும் எதிர்பாராத சம்பவங்கள்தானாம் இப்படத்தின் கதைக்களம்!

இந்த படத்தில் ‘தலைவாசல்’ விஜய், பிளாக் பாண்டி,கிரேன் மனோகர், ஜெயமணி உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு குணசேகரன் ஒளிப்பதிவு செய்ய, டேவிட் கிறிஸ்டோபர் இசை அமைக்கிறார். இறுதிகட்ட பணிகளில் இருக்கும் இந்த படம் விரைவில் வெளியாகும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;