‘அறம்’ இயக்குனரோட அடுத்த ஹீரோ யார்?

‘அறம்’ கோபி நயினார் அடுத்த படத்தின் ஹீரோ சித்தார்த்தாம்!

செய்திகள் 2-Mar-2018 10:53 AM IST Top 10 கருத்துக்கள்

நயன்தாரா நடிப்பில் ‘அறம்’ படத்தை இயக்கிய கோபி நயினார் தனது முதல் படத்தின் மூலமே கவனம் பெற்ற ஒரு இயக்குனராகி விட்டார். இப்போது அவரது அடுத்த படம் என்ன? யார் ஹீரோ? போன்ற கேள்விகள் ரசிகர்களிடையே இருந்து வரும் நிலையில் அவர் ஜி.வி.பிரகாஷ் குமாரை வைத்து ஒரு படத்தை இயக்கவிருக்கிறார் என்ற தகவல் வெளியாகியிருந்தது. ஆனால் இது குறித்த எந்த அதிகாரபூர்வ தகவலும் இரு தரப்பிலிருந்து வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இப்போது திடீர் திருப்பமாக கோபி நயனார் அடுத்து இயக்கும் படத்தின் ஹீரோ சித்தார்த் என்று நமக்கு நம்பத்தகுந்த வட்டாரத்திலிருந்து தகவல் கிடைத்துள்ளதோடு இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பும் விரைவில் வெளியாகவிருக்கிறது என்று அந்த தகவல் தெரிவிக்கிறது.

#Siddarth #GopiNainar #Aramm #Aval

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

குலேபகாவலி - குலேபா பாடல் வீடியோ


;