‘தீரன்’ வழியில் விக்ரமின் ‘சாமி-2’

திருநெல்வேலி, மதுரை, தூத்துக்குடியை தொடர்ந்து ஜெய்சால்மரில்  விக்ரம், ஹரியின் ‘சாமி-2’ படப்பிடிப்பு!

செய்திகள் 28-Feb-2018 12:46 PM IST VRC கருத்துக்கள்

ஹரி இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் ‘சாமி-2’ படத்தின் படப்பிடிப்பு திருநெல்வேலி, மதுரை ஆகிய இடங்களில் நடந்து முடிந்ததை தொடர்ந்து நாளை முதல் தூத்துக்குடியில் இரண்டு நாட்கள் படப்பிடிப்பு நடைபெறவிருக்கிறது. தூத்துக்குடியில் நடக்கும் படப்பிடிப்பை தொடர்ந்து இப்படத்தின் படப்பிடிப்பு ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள ஜெய்சால்மரில் நடக்கவிருக்கிறது. இதற்காக ’சாமி-2’ படக்குழுவினர் மார்ச்-5-ஆம் தேதி ஜெய்சாலமர் பயணமாகவிருக்கிறார்கள். அங்கு இப்படத்தின் முக்கியமான சில காட்சிகளையும், அதிரடி சண்டை காட்சிகளையும் படமாக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். ஜெய்சால்மரில் ‘சாமி-2’வின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட 20 நாட்கள் நடக்கவிருக்கிறது. சமீபத்தில் கார்த்தி நடிப்பில் வெளியாகி பெரும் வெற்றிப் படமாக அமந்த ‘தீரன் அதிகாரம்’ ஒன்று பத்தின் படப்பிடிப்பு ஜெய்சால்மரில் 50 நாட்களுக்கும் மேல் நடைபெற்றது. அதைப் போல இப்போது ‘சாமி-2’ வின் படப்பிடிப்பும் ஜெய்சால்மரில் தொடர்ந்து பல நாட்கள் நடக்கவிருக்கிறது. 50 நாட்களுக்கும் மேல் படப்பிடிப்பு நடந்துள்ள ‘சாமி-2’வின் படப்பிடிப்பு இன்னும் 50 நாட்கள் நடக்கவிருக்கிறது.

‘சாமி-2’வில் விக்ரமுடன் கதாநாயகிகளாக த்ரிஷா, கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடிக்கிறார்கள். பாபி சிம்ஹா வில்லனாக நடிக்கிறார். இவர்களுடன் சூரி, பிரபு, ஓ.ஏ.கே.சுந்தர், ஜான் விஜய் ஆகியோரும் நடிக்கிறார்கள். தேவி ஸ்ரீ பிரசாத் இசை அமைக்கிறார். ‘புலி’ படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரும் ‘இருமுகன்’ படத்தை தயாரித்தவருமான ஷிபு தமீன் தனது ‘தமீன் ஃபிலிம்ஸ்’ நிறுவனம் சார்பில் ‘சாமி-2’வை தயாரித்து வருகிறார்.

#Chiyaan #Vikram #Saamy2 #Trisha #KeerthySuresh #Hari #ShibuThameens #DeviSriPrasad #DSP

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

வர்மா ட்ரைலர்


;