பார்த்திபனின் ‘உள்ளே வெளியே-2’வில் இணையும் பிரபலம்!

பார்த்திபன் இயக்கி நடிக்கும் ‘உள்ளே வெளியே-2’வில் சமுத்திரக்கனி நடிக்க ஒப்பந்தம்!

செய்திகள் 27-Feb-2018 2:57 PM IST VRC கருத்துக்கள்

பார்த்திபன் இயக்கி நடித்து வெற்றிபெற்ற படம் ‘உள்ளே வெளியே’. இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க முடிவு செய்துள்ளார் பார்த்திபன் என்றும் இதற்கான ஸ்கிரிப்ட் வேலையில் பார்த்திபன் ஈடுபட்டுள்ளார் என்றும் சில நாட்களுக்கு முன் செய்தி வெளியிட்டிருந்தோம். இந்த படத்திற்கான வேலைகளை துவங்கியுள்ள பார்த்திபன் இந்த படத்தின் முக்கியமான ஒரு கேரட்கடருக்காக சமுத்திரக்கனியை ஒப்பந்தம் செய்துள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. பார்த்திபனும், சமுத்திரக்கனியும் சூர்யாவின் ‘மாஸ்’ படத்தில் இணைந்து நடித்திருந்தார்கள். அதனை தொடர்ந்து இருவரும் இப்போது இந்த படத்தில் இணைகிறார்கள். இந்த படத்தில் பார்த்திபன், சமுத்திரக்கனியுடன் மம்தா மோகன்தாஸ், ரோபோ சங்கர், ஆடுகளம் கிஷோர், எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோரும் நடிக்கிறார்கள்! இது சம்பந்தப்பட்ட அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

#Parthiepan #UlleVeliya2 #Samuthirakani #Suriya #Mass #AadukalamKishore #RoboShankar #MamtaMohandas #MSBhaskar

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சூரரைப் போற்று டீஸர்


;