’சூர்யா-36’ படத்துக்காக சென்னையில் பிரம்மாண்ட செட்!

’சூர்யா-36’ படத்திற்காக சென்னையில் அம்பாசமுத்திரம் நகரம் போன்ற பிரம்மாண்ட செட்!

செய்திகள் 22-Feb-2018 11:01 AM IST VRC கருத்துக்கள்

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் சூர்யாவின் 36-வது படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்து முடிந்தது. இதனை தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம்கட்ட படப்பிடிப்புக்கு படக்குழுவினர் தயராகி வருகின்றனர்! இப்போது இந்த படத்திற்காக அம்பாசமுத்திரம் நகரத்தை போன்ற மிகப் பிரம்மாண்டமான செட் ஒன்றை 3 கோடி ரூபாய் செலவில் சென்னையில் இரவு பகலாக உருவாக்கி வருகிறார்கள். இந்த செட் அமைக்கும் பணி கலை இயக்குனர் ஆர்.கே.விஜயன் தலைமையில் 220-கும் மேற்பட்ட தொழிலாளர்கள் செய்து வருகிறார்கள். இந்த செட்டில் 20 நாட்கள் தொடர்ந்து படப்பிடிப்பு நடக்கவிருக்கிறது.

‘ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்’ நிறுவனம் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கும் இந்த படத்தில் ரகுல் ப்ரீத் சிங், சாய் பல்லவி ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள். யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தின் படத்தொகுப்பை ஜி.கே.பிரசன்னா கவனிக்க சண்டை பயிற்சியை சாம் கவனிக்கிறார். சூர்யாவும், செல்வராகவனும் முதன் முதலாக இணைந்துள்ள இந்த படம் மீது இப்போதே பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

#Suriya36 #Selvaraghavan #DreamWarriorPictures #ThaanaSerndhaKootam #VigneshSivan #Anirudh #TSK

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சூர்யா 36 படத்துவக்கம் - வீடியோ


;