நடிகர் ஆர்யா மணக்கப் போகும் பெண் யார்?

’எங்கவீட்டு மாப்பிள்ளை’ ஆர்யாவுக்கு ஏப்ரல் மாதம் திருமணம்!

செய்திகள் 19-Feb-2018 5:35 PM IST VRC கருத்துக்கள்

நடிகர் ஆர்யாவுக்கு ஆண் ரசிகர்களை விட பெண் ரசிகைகள் ஏராளம்! இப்படியிருக்க, ஆர்யா தனக்கு திருமண வயது ஆகிவிட்டது என்றும் தனக்கு ஏற்ற பெண்னை தேடி கொண்டிருக்கிறேன் என்றும், தன்னை மணக்க விருப்பமுள்ளவர்கள் இந்த எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று ஒரு தொலைபேசி எண்ணை குறிப்பிட்டு சமீபத்தில் சோஷியல் மீடியாவில் விளம்பரம் செய்திருந்தார். இந்த விளம்பரம் வெளியான பிறகு 70,000-த்திற்கும் மேற்பட்டவர்கள் ஆர்யாவை திருமணம் செய்ய விருப்பம் தெரிவித்து, அவரை தொடர்பு கொண்டுள்ளனர். இவ்வளவு பேரையும் ஆர்யாவால் திருமணம் செய்ய முடியாது அல்லவா? அதனால் ஆர்யா அந்த எழுபதினாயிரம் பேரிலிருந்து 16 பேரை தேர்வு செய்து அதிலிருந்து தனக்கு ஏற்ற ஒருவரை தேர்வு செய்து திருமணம் செய்ய முடிவு செய்துள்ளார்! ஆர்யா தேர்வு செய்யும் அந்த பெண் யார் என்பது தெரிய வர நாம் ஏப்ரல் மாதம் வரை காத்திருக்க வேண்டும்!

மேலே குறிப்பிட்டிருக்கும் விஷயம் இன்று மாலை 7 மணிமுதல் தனது ஒளிபரப்பை துவகும் புதிய தமிழ் தொலைக்காட்சி சேனலான ‘கலர்ஸ்’ டிவிக்காக ஆர்யா பங்கு பெறும் ரியாலிட்டி ஷோவான ‘எங்கவீட்டு மாப்பிள்ளை’யில் இடம் பெறும் சுவாரஸ்ய விஷயங்கள்தான்!

‘கலர்ஸ்’ டிவியில் இந்த நிகழ்ச்சி நாளை முதல் வாரந்தோறும் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகவிருக்கிறது. 8 வாரங்கள் தொடர்ந்து ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியில் ஆர்யா தேர்வு செய்யும் பெண்ணை ஏப்ரல் மாதம் மணக்கவிருக்கிறார்! இதனை நேற்று சென்னையில் நடந்த இந்த சேனலின் பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்தனர்!

#Arya #Aarya #Jammy #Marraige #ColorsTvTamil #ColosTamil

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நம்ம வீட்டு பிள்ளை - ட்ரைலர்


;