நயன்தாரா, ஹன்சிகாவை தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் பிரபல நடிகை?

ரவிகுமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ரகுல் ப்ரீத் சிங்!

செய்திகள் 17-Feb-2018 11:48 AM IST Top 10 கருத்துக்கள்

பொன்ராம் இயக்கத்தில் ‘சீமராஜா’ படத்தில் நடித்து வரும் சிவகார்த்திக்யேன் அடுத்து ‘இன்று நேற்று நாளை’ படத்தை இயக்கிய ஆர்.ரவிகுமார் இயக்கும் படத்தில் நடிக்கிறார். இந்த படத்தையும் ஆர்.டி.ராஜாவின் 24AM STUDIOS நிறுவனம் தயாரிக்க, இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கிறார். சிவகார்த்திகேயனின் ‘சீமராஜா’வின் படப்பிடிப்பு முடிந்ததும் ஆர்.ரவிக்குமர் இயக்கும் படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகவுள்ளது என்றும் இந்த படத்தில் கதாநாயகியாக ரகுல் ப்ரீத்சிங் நடிக்க இருக்கிறார் என்றும் தகவல் கிடைத்துள்ளது.

கார்த்தியுடன் ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தில் நடித்த ரகுல் ப்ரீத்சிங் இப்போது சூர்யாவுடன், செல்வராகவன் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். சிவகார்த்திகேயன் இதற்கு முன் நடித்த படங்களில் ஹன்சிகா, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா என தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோயின்கள் கதாநாயகிகளாக நடிக்க இப்போது ரகுல் ப்ரீத் சிங்கும் சிவகார்த்திகேயனுடன் இணையவிருக்கிறார். இது குறித்த அதிகாரபூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

#SeemaRaja #SivaKarthikeyan #SK12 #Samantha #Ponram #Soori #Rishikanth #SK13 #ARRahman #24AmStudios #Ravikumar #RakulPreetSingh

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பராக் பராக் வீடியோ பாடல் - Seemaraja


;