ராஜுமுருகன், ஜீவா இணையும் ‘ஜிப்ஸி’ புதிய தகவல்கள்!

திரையுலக பிரபலங்கள் கலந்துகொண்ட ராஜுமுருகன், ஜீவாவின்  ‘ஜிப்ஸி’  பூஜை!

செய்திகள் 16-Feb-2018 12:03 PM IST VRC கருத்துக்கள்

ரண்டு தேசிய விருதுகள் பெற்ற ‘ஜோக்கர்’ படத்தை இயக்கிய ராஜு முருகன் அடுத்து இயக்கும் படம் ‘ஜிப்ஸி’ என்றும் இந்த படத்தில் கதாநாயகனாக ஜீவா நடிக்கிறார் என்றும் தகவலை சில நாட்களுக்கு முன் வெளியிட்டிருந்தோம். இந்த படத்தின் பூஜை நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த பூஜையில் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு, இயக்குனர்கள் பா.ரஞ்சித், வினோத், பிரம்மா, சத்யா, தயாரிப்பாளர் ‘எஸ்கேப் ஆர்டிஸ்ட்’ மதன் மற்றும் பல திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

‘ஒலிம்பியா மூவீஸ்’ என்ற பட நிறுவனத்தின் சார்பில் எஸ்.அம்பேத்குமார் தயாரிக்கும் இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார். யுகபாரதி பாடல்களை எழுதுகிறார். ஒளிப்பதிவை எஸ்.கே.செல்வகுமார் கவனிக்க, படத்தொகுப்பை ‘அருவி’ படத்தில் படத்தொகுப்பாளராக பணிபுரிந்த ரேமண்ட் டெரிக் கவனிக்கிறார். பாலாவின் ‘நாச்சியார்’ படத்தில் கலை இயக்குனராக பணியாற்றிய பாலசந்திரா இப்படத்தின் கலை இயக்கத்தை கவனிக்கிறார். இந்த படத்தில் ஜீவாவுடன் நடிக்க இருக்கும் கதாநாயகி, மற்ற நடிகர் நடிகைகள் குறித்த விவரங்களை படக்குழுவினர் விரைவில் அறிவிக்க உள்ளனர்.

#RajuMurugan #Jiiva #Gypsy #OlympiaFilms #Joker #Kee

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கொரில்லா - ட்ரைலர் 1


;