பாண்டியராஜன் பட தலைப்பில் நடிக்கும் விமல்!

விமல், வரலட்சுமி சரத்குமார் நடிக்கும் ‘கன்னிராசி’

செய்திகள் 16-Feb-2018 11:23 AM IST VRC கருத்துக்கள்

சமீபத்தில் வெளியான ‘மன்னர் வகையறா’ படத்தை தொடர்ந்து ‘கன்னி ராசி’ என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார் விமல். பாண்டியராஜன் இயக்கத்தில் பிரபு ரேவதி இணைந்து நடித்த 1985-ல் வெளியான படம் ‘கன்னி ராசி’. இப்போது இந்த படத்தலைப்பை விமல் நடிக்கும் படத்திற்கு சூட்டியுள்ளனர். ‘கிங் மூவி மேக்கர்ஸ்’ என்ற நிறுவனம் சார்பில் பி.ஷமீம் இப்ராகிம் தயாரித்து வரும் இந்த படத்தை எஸ்.முத்துராமன் இயக்குகிறார். இந்த படத்தில் விமலுக்கு ஜோடியாக வரலட்சுமி சரத்குமார் நடிக்க, இவர்களுடன் பாண்டியராஜன், ‘ரோபோ’ சங்கர், ‘யோகி’ பாபு முதலானோரும் நடிக்கிறார்கள்.

இசைக்கு விஷால் சந்திரசேகர், ஒளிபிபதிவுக்கு எஸ்.செல்வகுமார், படத்தொகுப்புக்கு ராஜா முகமது என கூட்டணி அமைத்துள்ள இயக்குனர் எஸ்.முத்துராமன் ‘கன்னி ராசி’ குறித்து பேசும்போது, ‘‘படத்தின் கதைப்படி கதாநாயகன் விமல் குடும்பத்தினர் அனைவருக்கும் கன்னிராசி. எல்லோரும் காதல் திருமணம் செய்து கொண்டவர்கள். ஆனால் விமல் பெற்றோர்கள் நிச்சயிக்கும் பெண்ணைத்தான் திருமணம் செய்து கொள்வது என்ற லட்சியத்துடன் இருக்கிறார். இந்த நிலையில் விமல் வீட்டின் எதிர் வீட்டிற்கு வரலட்சுமி குடும்பத்தினர் குடி வருகிறார்கள். இரண்டு குடும்பத்தினரும் சந்தித்துக் கொள்ளும்போது நடக்கும் சம்பவங்கள் தான் படம்! அதை காமெடியாக சொல்கிறோம்‘’ என்றார். இந்த படம் விரைவில் வெளியாகவிருக்கிறது!

#KanniRasi #Vemal #Varlakshmi #MannarVagayara #VarlakshmiSarathkumar

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

வெல்வெட் நகரம் ட்ரைலர்


;