சந்தானத்தின் முதல் இரண்டாம் பாக படம்!

சந்தானம், ராம்பாலா கூட்டணியில் உருவாகிறது ‘தில்லுக்கு துட்டு’ இரண்டாம் பாகம்!

செய்திகள் 15-Feb-2018 1:24 PM IST Top 10 கருத்துக்கள்

‘லொள்ளு சபா’ புகழ் ராம்பாலா இயக்கத்தில் சந்தானம் நடிப்பில் வெளியாகி வெற்றிபெற்ற படம் ‘தில்லுக்கு துட்டு’. சந்தானம், ராம்பாலா இருவரும் முதன் முதலாக இணைந்த இப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க இருவரும் முடிவு செய்துள்ளார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது. முதல் பாகத்தை என்.ராமசாமியின் ‘ஸ்ரீதேனாண்டாள் ஃபிலிம்ஸ்’ நிறுவனம் தயாரித்தது. ஆனால் இரண்டாம் பாகத்தை இயக்குனர் ராம் பாலா சொந்தமாக தயாரிக்கவிருக்கிறார் என்று கூறப்படுகிறது. இது சம்பந்தமான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகுமாம். ராம்பாலா இப்போது ‘கயல்’ சந்திரன் நடிப்பில் ‘டாவு’ படத்தை இயக்குகிறார். சந்தானம் ‘சர்வர் சுந்தரம்’, ‘ஓடி ஓடி உழைக்கணும்’, ‘மன்னவன் வந்தானடி’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. சந்தானம் நடிப்பில் இதுவரை வெளியாகிய படங்களின் இரண்டாம் பாகம் உருவாகியதிலை. ‘தில்லுக்கு துட்டு’ தான் சந்தானம் நடிக்கும் முதல் இரண்டாம் பாகப்படம்!

#DhillukuDhuddu #RamBala #Santhanam #MottaRajendran #Horror #DhillukuDhuddu2

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

A1 டீஸர்


;