சமீபத்த்ல் நடிகர் கமல்ஹாசன் ஹார்வர்ட் யூனிவர்சிடியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்று பேசினார். அதனை தொடர்ந்து அங்குள்ள நிருபர்களுக்கு பேட்டி அளிக்கும்போது, தான் அரசியிலில் ஈடுபட்டிருப்பதால் இப்போது நடித்து வரும் படங்கள் தவிரி இனி வேறு திரைப்படங்கலில் நடிக்கப் போவதில்லை என்று கமல்ஹாசன் பேசியதாக தகவல் வெளியாக, அதை வைத்து ‘கமல்ஹாசன் இனி சினிமாவில் நடிக்க மாட்டார்’ என்பது போல் இங்குள்ள ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.! இந்நிலையில் இந்த தகவல்களில் உண்மை இல்லை என்றும் நடிப்புக்கு முழுக்கு போடவில்லை என்றும் தொடர்ந்து நடிப்பேன் என்றும் அந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் கமல்ஹாசன். ‘விஸ்வரூபம்-2’, ‘சபாஷ்நாய்டு’ ஆகிய படங்களை தொடர்ந்து ஷங்கர் இயக்கத்தில் ‘இந்தியன்-2’ படத்திலும் நடிக்க இருக்கிறார் கமல்ஹாசன். இதனால் கமல்ஹாசன் தீவிர அரசியலில் ஈடுபட்டாலும் சினிமாவில் நடிப்பதையும் தொடர்வார் என்பது உறுதியாகியுள்ளது.
#Kamal #KamalHaasan #Politics #Vishwaroopam2 # SabaashNaidu
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், காஜல் அகர்வால் உட்பட பலர் நடிக்கும் படம் ‘இந்தியன்-2’. இந்த படத்தின்...
மாநகரம், கைதி ஆகிய படங்களை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் விஜய்யை வைத்து ‘மாஸ்டர்’ படத்தை இயக்கி...
1983-ல் நடந்த உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் கபில் தேவ் தலைமையிலான இந்திய அணி வென்று சாதனை...