‘மழை’ இயக்குனருடன் இணையும் சேரன்!

மழை படத்தை இயக்கிய ராஜ்குமார் இயக்கத்தில் சேரன் கதாநாயகனாக நடிக்கும் படம்!

செய்திகள் 12-Feb-2018 11:05 AM IST VRC கருத்துக்கள்

தமிழில் குறிப்பிடத்தக்க சில படங்களை வழங்கியவர் சேரன். இவர் இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் ‘ஜே.கே.எனும் நண்பனின் வாழ்க்கை’. 2015-ல் வெளியான இந்த படத்தை தொடர்ந்து ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு சேரன் மீண்டும் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார். ‘ஜெயம்’ ரவி நடிப்பில் ‘மழை’ என்ற படத்தை இயக்கிய ராஜ்குமார் இயக்கத்தில் கதாநாயகனாக நடிக்க இருக்கிறார் சேரன் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இன்னும் பெயரிடப்படாத இந்த படத்திற்கான கதாநாயகி தேர்வு நடந்து வர, தம்பி ராமையா, எம்.எஸ்.பாஸ்கர், ஜெயப்பிரகாஷ், சுகன்யா முதலானோர் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்கள் என்றும், இந்த படத்தின் படப்பிடிப்பு மிக விரைவில் துவங்கவிருக்கிறது என்றும் கூறப்படுகிறது.


#Cheran #Rajkumar #Mazhai #JayamRavi #Shriya #JKEnnumNanbaninVaazhkai

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

டு லெட் ட்ரைலர்


;