2.0 ரிலீஸ் தேதியை அதிகாரபூர்வமாக கைப்பற்றிய காலா!

காலா படத்தின் ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்த தனுஷ்!

செய்திகள் 10-Feb-2018 7:18 PM IST Top 10 கருத்துக்கள்

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் 2.0 படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் திட்டமிட்டபடி முடியும் சூழல் உருவாகாததால், படத்தின் ரிலீஸ் ஏப்ரலில் இருந்து மாற்றம் அடையலாம் என்றும், அதே தேதியில் ரஜினி நடிக்கும் இன்னொரு படமான காலா ரிலீஸாக வாய்ப்புள்ளது எனவும் கடந்த வாரம் செய்தி வெளியிட்டிருந்தோம். தற்போது அந்த செய்தி அதிகாரப்பூர்வமாகவே உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஆம்... 2.0 வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த ஏப்ரல் 27ஆம் தேதியில் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகும் ‘காலா’ ரிலீஸாகவிருப்பதாக தயாரிப்பாளர் தனுஷ் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

காலா படத்தின் டப்பிங் பணிகள் முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் டீஸர், பாடல்கள் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


#Kaala #SuperstarRajinikanth #Rajini #PaRanjith #SanthoshNarayanan #Dhanush #LycaProductions

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பேட்ட டீஸர்


;