‘நீயா-2’ வில் ஜெய்யுடன் 3 கதாநாயகிகள்!

‘நீயா-2’ படத்தில் ஜெய்யுடன் ராய் லட்சுமி, வரலட்சுமி சரத்குமார், கேத்ரின் தெரெசா என 3 கதாநாயகிகள் நடிக்கிறார்கள்!

செய்திகள் 10-Feb-2018 3:00 PM IST Top 10 கருத்துக்கள்

விமல் நடிப்பில் ‘எத்தன்’ பட்த்தை இயக்கிய சுரேஷ் இப்போது இயக்கி வரும் படம் ‘நீயா-2’. இதில் ஜெய் கதாநாயகனாக நடிக்க, ராய் லட்சுமி, கேத்ரின் தெரெசா, வரலட்சுமி சரத்குமார் என் மூன்று கதாநாயகிகள் நடிக்கிறார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்த படம் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகிய ‘நீயா’ பட ஸ்டைலில் பழிவாங்கும் பாம்புகள் பற்றிய கதை என்பதால் இந்த படத்திற்கு ‘நீயா-2’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளதாம். ஆனால் இது ‘நீயா’ படத்தின் தொடர்ச்சியா என்பது குறித்த எந்த அதிகார்பூர்வ தகவலும் இதுவரை வெளியாகவில்லை. இதில் ஜெய் ஐடி நிறுவனத்தில் பணிபுரிபவராக நடிக்கிறாராம். இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்து விட்டது என்றும் இப்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது என்றும் அந்த தகவல் தெரிவிக்கிறது. மிக விரைவில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகவிருக்கிறதாம்.

#Jai #RaaiLaxmi #CatherineTresa #VaralaxmiSarathkumar #Vemal #Eththan #Suresh

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

புடிச்சிருக்கா இல்ல புடிக்கலயா வீடியோ பாடல் - கலகலப்பு 2


;