‘சூர்யா-36’ படத்திற்கான முதல் ட்யூன் ரெடி!

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்திற்கான ஒரு ட்யூன் ரெடியாகிவிட்டது குறித்து யுவன் ட்வீட்!

செய்திகள் 8-Feb-2018 11:11 AM IST Top 10 கருத்துக்கள்

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் இன்னும் பெயரிடப்படாத படத்தின் படப்பிடிப்பு கடந்த 15 நாட்களாக நடைபெற்று வந்தது. இத்துடன் இந்த படத்தின் முதல் ஷெட்யூல் படப்பிடிப்பு முடிந்து விட்டது. இரண்டாம் கட்ட படப்பிடிப்புக்கு தயாராகி வரும் நிலையில் இப்படத்திற்கு இசை அமைக்கும் யுவன் சங்கர் ராஜா, ‘மூன்று நாட்களுக்கு அப்புறம் படத்திற்கான சூப்பர் ட்யூன் ஒன்று ரெடியாகி விட்டது… பொன்னான அந்த காலங்கள் திரும்பியிருக்கின்றன’ என்று ட்வீட் செய்துள்ளார். இதற்கு பதிலளிக்கும் வகையில் இயக்குனர் செல்வராகவன் Neither have you Maestro. Always a pleasure creating our own magic with you என்று ட்வீட் செய்துள்ளார்.

தொடர்ந்து வெற்றிப் படங்களை வழங்கி வரும் ‘ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்’ நிறுவனம் சார்பில் எஸ்.ஆர்.பிகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு இருவரும் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தில் சூர்யாவுடன் ரகுல் பிரீத் சிங், சாய் பல்லவி ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள்.

#Suriya36 #Suriya #Selvaraghavan #RakulPreetSingh #SaiPallavi #YuvanShankarRaja #DreamWarriorPictures #SRPrabhu #SrPrakashBabu

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கடைக்குட்டி சிங்கம் - அடிவெள்ளக்கார வேலாயி வீடியோ பாடல்


;