‘கொரில்லா’வை தொடர்ந்து ‘ஜிப்ஸி’

ராஜுமுருகன் இயக்கத்தில் ஜிவா நடிக்கும் படம் ‘ஜிப்ஸி’

செய்திகள் 6-Feb-2018 10:50 AM IST VRC கருத்துக்கள்

‘குக்கூ’, ‘ஜோக்கர்’ ஆகிய படங்களை தொடர்ந்து ராஜுமுருகன் ஜீவா நடிப்பில் ஒரு படத்தை இயக்கவிருக்கிறார் என்றும் இந்த படத்தின் டைட்டில் அறிவிப்பு இரவு 12.01 மணி அளவில் வெளியிடவிருக்கிறது என்ற தகவலை நேற்று மாலை வெளியிட்டிருந்தோம். அதன் படி ராஜுமுருகன், ஜீவா இணையும் படத்திற்கு ‘ஜிப்ஸி ’என்று பெயர் சூட்டப்பட்ட அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

கார்த்தி நடித்த ‘தோழா’ படத்திற்கு ராஜுமுருகன் வசனம் எழுதியிருந்தார். அதனை தொடர்ந்து இப்போது பாலா இயக்கத்தில் விக்ரம் மகன் துருவ் நடிக்கும் ‘வர்மா’ படத்திற்கு வசனம் எழுதி வருகிறார் ராஜு முருகன். இந்த வேலைகள் முடியும் தருவாயில் இருப்பதாக கூறப்படுகிறது. ‘வர்மா’ பட வேலைகள் முடிந்ததும் ராஜுமுருகன் ‘ஜிப்ஸி’யை இயக்கும் வேலைகளில் ஈடுபடவுள்ளார்.

’ஜிப்ஸி’ படத்தை ‘தேசிங்கு ராஜா’, ‘மனங்கொத்தி பறவை’ ஆகிய படங்களை தயாரித்த ‘ஒலிம்பியா மூவீஸ்’ நிறுவனம் சார்பில் எஸ்.அம்பேத்குமார் தயாரிக்கிறார். ‘குக்கூ’, ‘ஜோக்கர்’ ஆகிய படங்களை போல ‘ஜிப்ஸியு’ம் சமூக வாழ்வியலை பிரதிபலிக்கும் படமாம்! இந்த படத்தின் படப்பிடிப்பு இந்தியா முழுவதிலும் பல்வேறு இடங்களில் நடக்க இருக்கிறது. ஜீவா நடித்துள்ள ‘கலகலப்பு-2’ வருகிற 9-ஆம் தேதி வெளியாகிறது. இந்த படத்தை தொடர்ந்து ‘கீ’ வெளியாகவிருக்கிறது. இந்த படங்களை தொடர்ந்து ஜிவா நடிக்கும் படம் ‘கொரில்லா’. இந்த படத்தை தொடர்ந்து ‘ஜிப்ஸி’யில் நடிக்கவுள்ளார் ஜீவா!

#RajuMurugan #Jiiva #Gypsy #OlympiaFilms #Joker #Kee

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கொரில்லா டீஸர்


;