அசுரவேகத்தில் படப்பிடிப்பை முடித்த சசிகுமார்!

அறிமுக இயக்குனர் மருதுபாண்டியன் இயக்கத்தில் சசிகுமார் நடிக்கும் ’அசுரவதம்’ அனைத்து படப்பிடிப்புகளும் முடிந்து விட்டது!

செய்திகள் 1-Feb-2018 11:53 AM IST Top 10 கருத்துக்கள்

சசிகுமார் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘கொடிவீரன்’. இந்த படம் ரிலீசாவதற்கு முன்பாகவே தனது அடுத்த படம் ‘அசுரவதம்’ என்றும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவிருக்கிறது என்ற அறிவிப்பை வெளியிட்டிருந்தார் சசிகுமார். ‘கொடிவீரன்’ பட ரிலீசை தொடர்ந்து அசுரவேகமாக நடந்து வந்த இப்படத்தின் அனைத்து படப்பிடிப்பு வேலைகளும் இப்போது முடிவடைந்து விட்டது என்பதை ட்வீட் மூலம் உறுதிபடுத்தியுள்ளார் சசிகுமார். ஏற்கெனவே பல இயக்குனர்களை அறிமுகப்படுத்திய சசிகுமார் ‘அசுரவதம்’ மூலம் மருது பாண்டியன் என்பவரை இயக்குனராக அறிமுகப்படுத்தியுள்ளார். ‘அசுரவதம்’ படத்தில் சசிகுமாருடன் நந்திதா ஸ்வேதா கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த படத்தை செவன் ஸ்கிரீன்ஸ் நிறுவனம் சார்பில் லீனா லலித்குமார் தயாரித்து வருகிறார்.

#Asuravadham #SasiKumar #MaruthuPandian #NandhitaSwetha #KodiVeeran

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

அலாதி அன்பை வீடியோ பாடல் - அசுரவாதம்


;