ரிலீஸ் தேதி குறித்த ‘சந்திரமௌலி’

கார்த்திக், கௌதம் கார்த்திக் முதன முதலாக இணைந்ந்து நடிக்கும் மிஸ்டர் சந்திரமௌலி ஏப்ரல் 27-ஆம் தேதி  வெளியாகிறது!

செய்திகள் 31-Jan-2018 11:38 AM IST VRC கருத்துக்கள்

கார்த்திக், கௌதம் கார்த்திக் முதன் முதலாக இணையும் படம் ‘மிஸ்டர் சந்திரமௌலி’. திரு இயக்கி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இந்த படத்தில் கார்த்திக், கௌதம் கார்த்திக்குடன் ரெஜினா கெசன்ட்ரா, வரலட்சுமி சரத்குமார், சதீஷ், இயக்குனர் மகேந்திரன், இயக்குனர் அகத்தியன், ‘மைம்’ கோபி, ஜெகன், விஜி சந்திரசேகர் உட்பட பலர் நடிக்கின்றனர். தனஞ்சயனின் ‘போஃப்டா’ நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தை ஏப்ரல் 27-ஆம் தேதி ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ளதை படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். ஒளிப்பதிவுக்கு ரிச்சர்ட் எம்.நாதன், இசைக்கு சாம்.சி. படத்தொகுப்புக்கு டி.எஸ்.சுரேஷ் என கூட்டணி அமைத்துள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை, பாண்டிச்சேரி முதலான இடங்களில் நடந்துள்ளது. ‘மிஸ்டர் சந்திரமௌலி’ காமெடி கலந்த ரொமான்டிக் படமாம்.

#MrChandramouli #GauthamKarthik #Karthik #Thiru #ReginaCassandra #Sathish

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மிஸ்டர். லோக்கல் - ட்ரைலர்


;