‘விஸ்வரூபம்’ டப்பிங்கில் கமல்ஹாசன்!

’விஸ்வரூபம்-2’ படத்தின் டப்பிங் வேலைகளை துவங்கினார் கமல்ஹாசன்

செய்திகள் 30-Jan-2018 2:55 PM IST VRC கருத்துக்கள்

கமல்ஹாசன் இயக்கி, தயாரித்து நடிக்கும் ‘விஸ்வரூபம்-2’ படத்தின் அனைத்து படப்பிடிப்பு வேலைகளும் முடிந்து விட்டது என்ற செய்தியை ஏற்கெனவே வெளியிட்டிருந்தோம். நீண்ட நாட்களாக தயாரிப்பில் இருந்து வரும் இந்த படத்தை மிக விரைவில் திரைக்கு கொண்டு வர கமல்ஹாசன் திட்டமிட்டுள்ளார். இந்நிலையில் இந்த படத்தின் டப்பிங் வேலைகளை துவங்கி விட்டார் கமல்ஹாசன். இந்த படத்தில் கமல்ஹாசனுடன் ராகுல் போஸ், ஆண்ட்ரியா, பூஜாகுமார், சேகர் கபூர் முதலானோர் நடிக்க, ஜிப்ரான் இசை அமைக்கிறார். சனு வர்கீஸ் ஒளிப்பதிவு செய்கிறார். இந்த பட வேலைகளை முடித்து விட்டு கமல்ஹாசன் தனது ‘சபாஷ் நாயுடு’ படத்தின் வேலைகளை மீண்டும் துவங்விருக்கிறார் என்றும் அதனை தொடர்ந்து ஷங்கர் இயக்கும் ‘இந்தியன்-2’ படத்தில் இணையவிருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.

#KamalHaasan #Andrea #PoojaKumar #Ghibran #KunalRajan #Vishwaroopam #Vishwaroopam2

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மாளிகை டீஸர்


;