ரசிகர்கள் எதிர்பார்த்த அந்த ரீமேக் படத்தில் நடிப்பதை உறுதிசெய்த சமந்தா!

சமந்தா நடிக்கவிருக்கும் புதிய படம் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு

செய்திகள் 24-Jan-2018 10:18 AM IST Chandru கருத்துக்கள்

2017ல் விஜய்யுடன் நடித்த ஒரேயொரு தமிழ்ப்படம் மட்டுமே சமந்தாவுக்கு ரிலீஸானது. ஆனால், இந்த வருடத்தில் அவரின் நடிப்பில் குறைந்தது 4 படங்களாவது வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. விஷாலுடன் நடித்துள்ள ‘இரும்புத்திரை’ படம் மார்ச் 28ல் வெளியாகும் என கூறப்படுகிறது. அதேபோல் தியாகராஜன் குமார ராஜா இயக்கத்தில் சமந்தா நடிக்கும் ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தின் படப்பிடிப்பும் விறுவிறுப்பாக நடைபெற்றது. இதுதவிர சாவித்திரியின் வாழ்க்கை வரலாறான ‘மகாநதி’ படத்திலும் நடித்து வருகிறார்.

இந்த மூன்று படங்கள் இல்லாமல், சமந்தா நடிப்பில் தமிழில் ரீமேக் ஆகும் என நீண்டநாட்களாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த ‘யு டர்ன்’ கன்னடத்தில் தமிழ் ரீமேக் பற்றிய அறிவிப்பையும் தற்போது அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளார் சமந்தா. ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் தயாரிப்பில் தமிழ், தெலுங்கு என ஒரே நேரத்தில் இரண்டு மொழிகளில் ரீமேக்காகும் இப்படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரியில் துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

#U-Turn #Samantha #PawanKumar #ShraddhaSrinath #SrinivasaSilverScreen #Sivakarthikeyan #IrumbuThirai

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஓ! பேபி Teaser


;