படக்குழுவினரை இன்ப வெள்ளத்தில் ஆழித்திய சிவகார்த்திகேயன்!

‘ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது’ படக்குழுவினரை வாழ்த்திய சிவகார்த்திகேயன்

செய்திகள் 23-Jan-2018 11:47 AM IST VRC கருத்துக்கள்

‘கிளாப் போர்டு’ என்ற நிறுவனம் சார்பில் வி.சத்யமூர்த்தி தயாரித்து நடிக்கும் படம் ‘ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது’. இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடந்து வருகிறது. இந்த படப்பிடிப்பிற்கு தயாரிப்பாளரும் நடிகருமான வி.சத்யமூர்த்தியின் நண்பரும் நடிகருமான சிவகார்த்திகேயன் வருகை தந்து படக்குழுவினருக்கு இன்ப வெள்ளத்தில் ஆழ்த்தி சென்றுள்ளார்! அப்போது, இந்த படத்தின் இயக்குனர் உட்பட அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களும் 21 வயதிற்குள் இருப்பவர்கள் என்பதை அறிந்து ஆச்சரியமுற்றுள்ளார் சிவகார்த்திகேயன். இந்த படத்தை அறிமுகம் ரமேஷ் வெங்கட் இயக்கி வருகிறார். ஒளிப்பதிவாளராக ஜோஷுவா ஜெ.பெரேஸ் அறிமுகமாகிறார். இசை அமைப்பாளராக அறிமுகம் கௌஷிக் கிரிஷ் பணியாற்றுகிறார்.

சிவகாத்திகேயன்ன் வருகையை குறித்து வி.சத்யமூர்த்தி கூறும்போது, ‘‘சிவகார்த்திகேயன் சாரின் எளிமை குணத்தை வெறும் வார்த்தைகளால் சொல்லி விட முடியாது. சினிமாவில் சாதிக்க துடிக்கும் பல இளம் கலைஞர்களுக்கு வழிகாட்டியாக திகழ்ந்து கொண்டிருக்கும் அவரிடமிருந்து வாழ்த்துக்களை பெற்றிருப்பது எங்கள் அனைவருக்கும் பெரும் மகிழ்ச்சி’’ என்று கூறியுள்ளார்.

#OdavumMudiyathuOliyavumMudiyathu #Sivakarthikeyan #ClapBoard #RameshVenkat

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கல்யாண வயசு - கோலமாவு கோகிலா


;