நிக்கி கல்ராணி, ‘பக்கா’வில் நடித்ததற்கான காரணம்?

ரஜினி ரசிகை கேரக்டர் என்பதால் தான் பக்காவில் நடிக்க ஒப்புக்கொண்டேன்! – நிக்கி கல்ராணி

செய்திகள் 22-Jan-2018 12:52 PM IST VRC கருத்துக்கள்

அறிமுக இயக்குனர் எஸ்.எஸ்.சூர்யா இயக்கத்தில் விக்ரம் பிரபு, நிக்கி கல்ராணி, பிந்து மாதவி, சூரி, ரவி மரியா, சதீஷ், ஆனந்தராஜ், நிழல்கள் ரவி, இமான் அண்ணாச்சி, வையாபுரி முதலானோர் நடிக்கும் படம் ‘பக்கா’. சத்யா இசை அமைக்கும் இந்த படத்தின் ஆடியோ வெளியிட்டு விழா நேற்று மாலை சென்னையில் நடைபெற்றது.

‘பக்கா’ படம் குறித்து இயக்குனர் எஸ்.எஸ்.சூர்யா பேசும்போது, ‘‘இதுவரை வெளிவந்த படங்களில் ஒரு காட்சியிலோ அல்லது ஒரு பாடல் காட்சியிலோ தான் திருவிழாவை பார்த்திருப்பீர்கள். ஆனால் ‘பக்கா’ படத்தை முழுக்க முழுக்க திருவிழா பின்னணியில் எடுக்கப்பட்டுள்ளது. ‘பக்கா’ ஜாலியான ஒரு காமெடி படமாக இருக்கும்! இந்த கதையை படமாக்க நான் சந்திக்காத தயாரிப்பாளர்களே இல்லை! ஆனால் நான் தேடி சென்று சந்திக்காத ஒரு தயாரிப்பாளரான சிவகுமார் சார் என்னை கூப்பிட்டு இந்த கதையை படமாக்க முன் வந்தார். அவருக்கு என் வாழ்நாள் முழுக்க நன்றி கடன் பட்டுள்ளேன்’’ என்றார்!

இசை அமைப்பாலர் சத்யா பேசும்போது, ‘‘நான் இசை அமைக்கும் முதல் முழுநீள கிராமத்து படம் ‘பக்கா’’ என்றார்!

நிக்கி கல்ராணி பேசும்போது, ‘நான் இந்த படத்தில் நடிக்க ஒரே காரணம் இதில் எனக்கு ரஜினி சாரின் ரசிகை கேரக்டர் என்பதால் தான்! நிஜத்திலும் நான் ரஜினி சாரின் ரசிகை என்பதால் இந்த படத்தில் ரொம்பவும் என்ஜாய் பண்ணி நடித்தேன். இந்த படத்தில் விக்ரம் பிரபு சார் இரண்டு வேடங்களில் நடித்துள்ளார். அவரோட இரண்டாவது கெட்-அப் சர்ப்ரைஸாக இருக்கும்’’ என்றார்!

#Pakka #NikkiGalrani #VikramPrabhu #BindhuMadhavi #Soori #RaviMaria #PakkaAudioLaunch

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தேவ் தமிழ் - ட்ரைலர்


;