தனுஷின் ‘மாரி-2’ படப்பிடிப்பு துவங்கியது!

பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ், சாய் பல்லவி நடிக்கும் ‘மாரி-2’வின் படப்பிடிப்பு துவங்கியது!

செய்திகள் 22-Jan-2018 12:27 PM IST VRC கருத்துக்கள்

பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் நடித்த ‘மாரி’யின் இரண்டாம் பாகம் உருவாகவிருக்கிறது என்ற தகவலை ஏற்கெனவே வெளியிட்டிருந்தோம். இதனை தொடர்ந்து இப்படத்தின் பூஜையும் சமீபத்தில் நடைபெற்றது. இந்நிலையில் ‘மாரி-2’வின் படப்பிடிப்பு இன்று துவங்குவதாக தனுஷ் ட்வீட் செய்துள்ளார். ‘மாரி-2’வில் தனுஷுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடிக்கிறார். இவர்களுடன் கிருஷ்ணா, மலையாள நடிகர் டோவினோ தாமஸ், வரலட்சுமி சரத்குமார், ரோபோ சங்கர் முதலானோரும் நடிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். ‘மாரி-2’வின் படப்பிடிப்பி மார்ச் மாதத்திற்குள் முடித்துவிட திட்டமிட்டுள்ள தனுஷ், ‘மாரி-2’ படப்பிடிப்பு வேலைகள் முடிந்ததும் ‘ஸ்ரீதேனாண்டாள் ஃபிலிம்ஸ்’ நிறுவனம் தயாரிக்கும் படத்தில் இணையவிருக்கிறார்.

#Dhanush #Maari #Maari2 #SaiPallavi #VaralaxmiSarathkumar #RoboShankar #Kreshna #Yuvan

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

வடசென்னை கதாபாத்திரம் அறிமுகம் வீடியோ


;