‘பக்கா’வை தொடர்ந்து ‘தர்மம்’

விக்ரம் பிரபு, நிக்கி கல்ராணி நடிப்பில் ‘பக்கா’ படத்தை தயாரித்திருக்கும் நிறுவனத்தின் அடுத்த தயாரிப்பு ‘தர்மம்’

செய்திகள் 22-Jan-2018 10:36 AM IST VRC கருத்துக்கள்

விக்ரம் பிரபு, நிக்கி கல்ராணி இரண்டாவது முறையாக இணைந்து நடிக்கும் படம் ‘பக்கா’. ‘அதிபர்’ என்ற படத்தை தயாரித்த ‘பென் கன்ஸ்டோரியம்’ நிறுவனம் சார்பில் டி.சிவக்குமார் தயாரித்துள்ள இந்த படத்தை அறிமுக இயக்குனர் எஸ்.எஸ்.சூர்யா இயக்கியுள்ளார். சத்யா இசை அமைத்துள்ளார். இந்த படத்தின் ஆடியோ வெளியிட்டு விழா நேற்று மாலை சென்னையில் நடைபெற்றது. விரைவில் ரிலீசாகவிருக்கும் இந்த படத்தை தொடர்ந்து இந்த நிறுவனம் தயாரிக்க்ம் படத்திற்கு ‘தர்மம்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. பெண்களை மையப்படுத்திய கதையாம் ‘தர்மம்’. இந்த படத்திற்கான நடிகர் நடிகைகள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்களின் தேர்வு நடந்து வர, ‘பக்கா’ வெளியானதும் ‘தர்மம்’ படத்தின் படப்பிடிப்பு வேலைகள் ஆரம்பமாகுமாம்.

#Dharmam #Pakka #VikramPrabhu #NikkiGalrani #TSivakumar #SSSuriya

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

புடிச்சிருக்கா இல்ல புடிக்கலயா வீடியோ பாடல் - கலகலப்பு 2


;