ஆர்யாவுடன் மோதுவாரா விஷால்?

ஆர்யாவின் ‘கஜினிகாந்த்’ ரிலீஸ் தினத்திலேயே வெளியாகிறதா விஷாலின் ‘இரும்புத்திரை’

செய்திகள் 20-Jan-2018 1:26 PM IST Chandru கருத்துக்கள்

அறிமுக இயக்குனர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் விஷால் நடித்திருக்கும் படம் ‘இரும்புத்திரை’. டெக்னோ த்ரில்லராக உருவாகியிருக்கும் இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக முதல்முறையாக சமந்தா நடிக்கிறார். அதோடு, படத்தில் வில்லனாக அர்ஜுன் நடித்துள்ளதால் படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இப்படத்தை பிப்ரவரி 9ஆம் தேதி வெளியிடுவதற்கு முதலில் திட்டமிட்டிருந்தனர். ஆனால், அதே தேதியில் மைக்கேல் ராயப்பன் தயாரிப்பில், ஜீவா நடித்திருக்கும் ‘கீ’ படம் வெளியாகவிருப்பதால், அப்படத்திற்காக தன் ரிலீஸ் மாற்றியுள்ளதாக கீ ஆடியோ விழாவில் அறிவித்தார் விஷால். இதனால், ‘இரும்புத்திரை’ படத்தின் புதிய ரிலீஸ் தேதிக்காக ரசிகர்கள் காத்திருந்தனர்.

இந்நிலையில், இன்று ‘இரும்புத்திரை’ படத்தின் ஆடியோ லாஞ்ச் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து படக்குழுவுக்கு நெருங்கிய வட்டாரத்திடம் ரிலீஸ் குறித்து விசாரித்தபோது, படத்தை மார்ச் 29ஆம் தேதி வியாழக்கிழமை ரிலீஸ் செய்வதற்கு திட்டமிட்டுள்ளதாக தகவல் கிடைத்தது. ஆர்யா நடித்துள்ள ‘கஜினிகாந்த்’ படத்தை மார்ச் 30ஆம் தேதி ரிலீஸ் செய்யவிருப்பதாக ஏற்கெனவே தயாரிப்பாளர் கே.ஈ.ஞானவேல் ராஜா அறிவித்துள்ளார்.

இதனால், ஆர்யாவும், விஷாலும் கோடைவிடுமுறைக்கு மோதிக் கொள்வார்களா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

#Irumbuthirai #Vishal #Samantha #Arya #Ghajinikanth #Arjun #VishalFilmFactory #StudioGreen

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தில்லுக்கு துட்டு 2 டீஸர் 02


;