‘‘தரம் தாழ்ந்த விமர்சனங்களை கண்டுகொள்ள வேண்டாம்’’ - ரசிகர்களுக்கு சூர்யா வேண்டுகோள்!

தனியார் டிவி சேனலுக்கு எதிராகப் போராடும் ரசிகர்களுக்கு சூர்யா அறிவுரை

செய்திகள் 20-Jan-2018 12:27 PM IST Chandru கருத்துக்கள்

மூன்று நாட்களுக்கு முன்பு நடிகர் சூர்யா படம் பற்றிய செய்தி ஒன்றை தொகுத்து வழங்கிய தனியார் சேனல் விஜேக்கள் இரண்டு பேர், படம் பற்றிய செய்தியை மட்டும் சொல்லாமல், நடிகர் சூர்யாவைப் பற்றிய தனிநபர் விமர்சனமாக முன்வைத்தனர். இதனால் சூர்யாவின் ரசிகர்கள் அந்த தனியார் சேனலுக்கு எதிராக கடந்த மூன்று நாட்களாக சமூக வலைதளங்களில் கடுமையான கண்டனங்களை தெரிவித்து வந்தனர். அதோடு, இன்று காலை அந்த தனியார் சேனல் அலுவலகம் முன்பு ‘மன்னிப்பு கேட்கக் கோரி’ போராட்டமும் நடத்தினர். இந்த போராட்டத்தில் அகில இந்திய சூர்யா நற்பணி மன்றத்தைச் சேர்ந்த தலைவர், செயலாளர், மாநில அமைப்பாளர், ஒருங்கிணைப்பாளர் உட்பட 2000த்திற்கும் மேற்பட்ட சூர்யா ரசிகர்கள் கலந்து கொண்டனர்.

இந்நிலையில், இந்த போராட்டம் குறித்து அறிந்த நடிகர் சூர்யா அது குறித்து ட்வீட் ஒன்றைச் செய்துள்ளார். அதில், ‘‘தரம் தாழ்ந்த விமர்சனங்களுக்கு எதிர்வினையாற்றி நம் தரத்தை நாம் குறைத்துகொள்ள வேண்டாம். உங்களின் நேரத்தையும், சக்தியையும் பயனுள்ள செயல்களுக்கு செலவிடுங்கள். சமூகம் பயன் பெற!’’ என்று குறிபிட்டுள்ளார்.

கடைசியாக வந்த தகவலின்படி, சம்பந்தப்பட்ட தனியார் டிவி சேனல் இந்த விவகாரத்தில் மன்னிப்புக் கேட்பதாகக் கூறியதை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

#Suriya #ThaanaSernthaKoottam #Singam3 #SuriyafansProtest #TSK

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சூரரைப் போற்று டீஸர்


;