மைக்கேல் ராயப்பனின் அடுத்தடுத்த பட இயக்குனர்கள்!

’சங்கிலி புங்கிலி கதவத்தொற’ ஐக்,  ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் படங்களை தயாரிக்கும் மைக்கேல் ராயப்பன்!

செய்திகள் 19-Jan-2018 2:06 PM IST VRC கருத்துக்கள்

மைக்கேல் ராயப்பனின் ‘குளோபல் இன்ஃபோடெயின்மென்ட்’ நிறுவனம் தயாரித்துள்ள படம் ‘கீ’. இன்று ஆடியோ வெளீயிட்டு விழா நடைபெற்ற இந்த படத்தை அடுத்த மாதம் (ஃபிப்ரவரி’ 9-ஆம் தேதி ரிலீஸ் செய்ய முடிவு செய்திருக்கிறார்கள். இந்த படத்தை தொடந்து தான் தயாரிக்கவிருக்கும் இரண்டு படங்கள் குறித்த அறிவிப்பை வெளியிட்டார் மைக்கேல் ராயப்பன். அதில் ஒரு படத்தை ‘சங்கிலி புங்கிலி கதவத்தொற’ படத்தை இயக்கிய ஐக் இயக்கவிருக்கிறார். இரண்டாவது படத்தை ‘த்ரிஷா இல்லேனா நயன்தாரா’, ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ ஆகிய படங்களை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார். இதில் ஐக் இயக்கும் படத்தின் படப்பிடிப்பு மிக விரைவில் துவங்கவிருக்கிறதாம். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் படத்தின் வேலைகலும் மிக விரைவில் ஆரம்பமாகும் என்ரு கூறப்படுகிறது. ஆனால் இந்த படங்களியில் நடிக்கவிருக்கும் நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த எந்த விவரங்களையும் வெளியிடவில்லை. இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கபப்டுகிறது.

#AAA #AdhikRavichandran #Kee #VijaySethupathi #Jiiva #Vishal #MichaelRayappan #PLThenappan #NikkiGalrani

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மக்கள் செல்வன் வீடியோ பாடல் - Junga


;