‘கீ’க்காக ‘இரும்புத்திரை’ ரிலீஸை தள்ளி வைத்த விஷால்!

ஜீவாவின் ‘கீ’ ரிலீசுக்காக தனது இரும்புத்திரை ரிலீஸை  தள்ளி வைத்த விஷால்!

செய்திகள் 19-Jan-2018 1:32 PM IST VRC கருத்துக்கள்

ஜீவா, நிக்கி கல்ராணி நடிப்பில் அறிமுக இயக்குனர் காளீஸ் இயக்கியுள்ள படம் ’கீ’. மைக்கேல் ராயப்பனின் ‘குலோபல் இன்ஃபோடெயின்மென்ட்’ நிறுவனம் சார்பில் அவரது மகன் செராபியன் ராயசேவியர் தயாரித்துள்ள இந்த படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசை அமைத்துள்ளார். இந்த படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா இன்று காலை சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் நடிகரும், தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவரும், நடிகர் சங்க செயலாளருமான விஷால் உட்பட பல திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

மைக்கேல் ராயப்பன் இதற்கு முன் தயாரித்த ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படம் பெரும் நஷ்டத்தை ஏற்படுத்த, இது சம்பந்தமாக சிம்பு மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்திருந்தார் மைக்கேல் ராயப்பன். இந்த விஷயத்தின் மீது ஏன் விஷால் நடவடிக்கை எடுக்கவில்லை என்று இவ்விழாவில் பேசும்போது தயாரிப்பாளர் பி.எல்.தேனப்பவன் கேள்வி எழுப்பினார்.

அதற்கு விஷால் பதில் அளித்து பேசும்போது, ‘‘சிம்பு மீது ஆக்ஷன் எடுக்காமல் இல்லை! ஆனால் சிம்புவிடமிருந்து எந்த ரியாக்‌ஷனும் வரவில்லை. இருந்தாலும் இந்த விஷயத்தை அப்படியே விட்டு விடவில்லை. இது சம்பந்தமான நடவடிக்கைகள தொடர்ந்து எடுத்து வருகிறோம். சில பிரச்சனைகளை முடிவுக்கு கொண்டு வர கால அவகாசம் தேவைப்படும். அது மாதிரி தான் இதுவும்’’ என்றார்.

தொடர்ந்து விஷால் பேசும்போது, ‘‘மைக்கேல் ராயப்பன் ‘கீ’ படத்தை அடுத்த மாதம் 9-ஆம் தேதி வெளியிட திட்டமிட்டிருக்கிறார். என்னோட ‘இரும்புத்திரை’ படத்தையும் அதே தேதியில் வெளியிட முடிவு எடுத்திருக்கிறோம். ஆனால் இந்த இரண்டு படங்களும் ஒரே நாளில் வெளியாவது சரியாக இருக்காது. அதனால் மைக்கேல் ராயப்பனுக்காக எனது ‘இரும்புத்திரை’ படத்தின் ரிலீஸை நான் தள்ளி வைக்கிறேன்’’ என்று சொன்ன விஷால், ‘‘மைக்கேல் ராயப்பனுக்காக ஒரு படத்தை பணம் வாங்காமல் நடித்துக் கொடுக்கவும் நான் தயாராக இருக்கிறேன்’’ என்று விழா மேடையில் அறிவித்தார்.

#KeeAudioLaunch #Kee #VijaySethupathi #Jiiva #Vishal #MichaelRayappan #Irumbuthirai

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஜிப்ஸி டீஸர்


;