யூனிஃபார்ம் மாட்டிய பரத் : ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட ‘தீரன்’!

பரத் போலீஸாக நடிக்கும் புதிய படம் பற்றிய அறிவிப்பு

செய்திகள் 19-Jan-2018 11:44 AM IST Chandru கருத்துக்கள்

என்னோடு விளையாடு, கடுகு, ஸ்பைடர் என கடந்த வருடம் பரத்துக்கு மூன்று படங்கள் வெளியானது. இதனைத் தொடர்ந்து தற்போதும் கடைசி பெஞ்ச் கார்த்தி, சிம்பா, பொட்டு என மூன்று படங்களை கைவசம் வைத்துள்ளார் பரத். இதனைத் தொடர்ந்து ஆர்.கண்ணன் இயக்கத்தில் ‘காளிதாஸ்’ எனும் புதிய படமொன்றிலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் அவர். ஸ்ரீசெந்தில் இயக்கத்தில் உருவாகும் இப்படத்திற்காக முதல்முறையாக போலீஸ் யூனிஃபார்ம் மாட்டுகிறார் பரத். அவருக்கு ஜோடியாக அறிமுக மலையாள நடிகை அன் ஷீத்தல் நடிக்கிறார். இவர்களோடு ஆதவ் கண்ணதாசன், ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தில் நடித்த சுரேஷ் மேனன் ஆகியோரும் நடிக்கிறார்கள். விஷால் சந்திரசேகர் இசையமைக்கும் இப்படத்திற்கு, சுரேஷ் பாலா ஒளிப்பதிவு செய்ய, புவன் ஸ்ரீனிவாசன் எடிட்டிங் பணிகளை மேற்கொள்கிறார்.

‘காளிதாஸ்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை ‘கடைக்குட்டி சிங்கம்’ ஷூட்டிங் ஸ்பாட்டில் ‘தீரன்’ கார்த்தி வெளியிட்டார். படத்தின் இயக்குனர் பாண்டிராஜ், ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் ஆகியோரும் இணைந்து இந்த ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டனர்.

#Bharath #Kadugu #Pottu #Kalidass #RKannan #Karthi #VishalChandrasekar

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தாராள பிரபு டீஸர்


;