ஆர்.கண்ணன் இயக்கத்தில் அதர்வா நடிக்கும் ‘பூமராங்’

அதர்வா நடிக்கும் புதிய படம் பற்றிய அறிவிப்பு

செய்திகள் 19-Jan-2018 11:31 AM IST Chandru கருத்துக்கள்

‘இவன் தந்திரன்’ படத்தைத் தொடர்ந்து ‘பூமராங்’ எனும் புதிய படத்தை இயக்கவிருக்கிறார் ஆர்.கண்ணன். அதர்வா நாயகனாக நடிக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ‘எனை நோக்கிப் பாயும் தோட்டா’ படத்தில் நடிக்கும் மேகா ஆகாஷ் நடிக்கிறார். இவர்களுடன் ஆர்.ஜே.பாலாஜி, சதீஷ், உபென் பட்டேல், சுஹாசினி மணிரத்னம் ஆகியோரும் நடிக்கிறார்கள். ராதன் இசையமைக்கும் இப்படத்திற்கு பிரசன்னா எஸ் குமார் ஒளிப்பதிவு செய்ய, எடிட்டிங் பணிகளை மேற்கொள்கிறார் ஆர்.கே.செல்வா.

‘பூமராங்’ படத்தின் டைட்டில் லுக் போஸ்டரை நேற்று சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். இன்று இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியுள்ளது. இப்படத்தை இயக்குனர் கண்ணனே சொந்த பேனரில் தயாரிப்பது குறிப்பிடத்தக்கது.

#Boomerang #Atharva #RKannan #IvanThanthiran #MeghaAkash #RJBalaji #Sathish #SuhasiniManiratnam

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

என்னை நோக்கி பாயும் தொட்டே ட்ரைலர்


;