40 நாள் ஷூட்டிங், மார்ச் 30ல் ரிலீஸ் : பரபரக்கும் கஜினிகாந்த்!

ஆர்யா நடிப்பில் உருவாகிவரும் ‘கஜினிகாந்த்’ படத்தின் முக்கிய தகவல்கள்

செய்திகள் 17-Jan-2018 5:26 PM IST Chandru கருத்துக்கள்

ஹர ஹர மஹாதேவகி, இருட்டு அறையில் முரட்டு குத்து படங்களைத் தொடர்ந்து ஸ்டுடியோ கிரீன் கே.ஈ.ஞானவேல் ராஜா தயாரிப்பில் உருவாகும் ‘கஜினிகாந்த்’ படம் மூலம் ஹாட்ரிக் கூட்டணி அமைத்துள்ளார் இயக்குனர் சந்தோஷ் பி.ஜெயக்குமார். ஆர்யா, சாயிஷா நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த நவம்பர் இறுதியில் துவங்கியுள்ளது. இப்படத்திற்காக மொத்தம் 15 நாட்கள் மட்டுமே ப்ரீ புரொடக்ஷனுக்காக எடுத்துக் கொள்ளப்பட்டதாம். அதோடு, இப்படத்தின் படப்பிடிப்ஙை ஒட்டுமொத்தமாக 40 நாட்களில் முடிக்க திட்டமிட்டிருந்தனர். அதன்படி இம்மாதம் 30ம் தேதி இப்படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்யவிருக்கிறார்களாம்.

ஏற்கெனவே வெளிவந்த ‘கஜினிகாந்த்’ படத்தின் டீஸரைத் தொடர்ந்து இன்று சிங்கிள் டிராக் ஒன்றையும் ரிலீஸ் செய்துள்ளனர். அதோடு, இப்படத்தை உலகமெங்கும் மார்ச் 30ஆம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளார்களாம். இப்படம் ‘பலே பலே மகாடிவோய்’ என்ற தெலுங்குப் படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.

#Ghajinikanth #Arya #StudioGreen #SanthoshPJayakumar #Sayyeshaa #PrasannaGK #BalamuraliBalu

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மெஹந்தி சர்க்கஸ் - ட்ரைலர்


;