சத்யராஜ் நடிக்கும் சூப்பர் நேச்சுரல் த்ரில்லர் படம்!

‘கள்ளப்படம்’ படத்தை இயக்கிய வேல் இயக்கத்தில் சூப்பர் நேச்சுரல் த்ரில்லர் படத்தில் நடிக்கும் சத்யராஜ்!

செய்திகள் 17-Jan-2018 11:35 AM IST VRC கருத்துக்கள்

‘கள்ளப்படம்’ படத்தை இயக்கிய வேல் அடுத்து இயக்கும் படம் சூப்பர் நேச்சுரல் கதையாக உருவாகவிருக்கிறது. எஃப்.எம்.ஸ்டேஷன் பின்னணியில் நடக்கும் இந்த படத்தில் சத்யராஜ் முக்கிய கேரக்டரில் நடிக்க இருக்கிறார். இந்த படம் குறித்து இயக்குனர் வேல் கூறும்போது, ‘‘ஒரு படத்துக்கு பொருத்தமான நடிகர்கள் தேர்வு மிக முக்கியம் என்பதை நம்புபவன் நான். இந்த படத்தில் சத்யராஜ் சார் நடிக்க ஒப்புக்கொண்டதும் எனது பாதி வேலை முடிந்துவிட்டதாக உணர்ந்தேன். F.M.ரேடியோ ஸ்டேஷனை மையமாக கொண்ட சூப்பர் நேச்சுரல் த்ரில்லர் படமாக உருவாகும் இந்த படத்திற்கு சத்யராஜ் சாரை விட பொருத்தமான நடிகர் வேறு யாரும் இல்லை என்பது என் கருத்து! ஒரு ரேடியோ ஸ்டேஷனில் இரவில் நடக்கும் அசாதரண சம்பவங்களே இந்த படத்தின் மைய கருவாகும். கதை தத்ரூபமாக அமைய வேண்டும் என்பதற்காக ஒரு நிஜ எஃப்.எம்.ஸ்டேஷனிலேயே இப்படத்தை படமாக்க இருக்கிறோம். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் நடிக்கவிருக்கும் மற்ற நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடந்து வருகிறது’’ என்றார்.

#Sathyaraj #Kallappadam #Vel #Party #FMStation #VenkatPrabhu

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

வெல்வெட் நகரம் ட்ரைலர்


;