‘அனிமேஷன்’ எம்.ஜி.ஆர். நடிக்கும் ‘கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு’

அனிமேஷன் தொழில்நுட்பத்தில் எம்.ஜி.ஆர்.நடிக்கும் ‘கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு’ படத்தின் பூஜை நாளை நடைபெறுகிறது!

செய்திகள் 16-Jan-2018 5:10 PM IST VRC கருத்துக்கள்

எம்.ஜி.ஆர்.அவர்களின் 101-வது பிறந்தநாள், நாளை (17-1-18) கொண்டாடப்படுகிறது. எம்.ஜி.ஆர். திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருந்தபோது திரைப்பட தயாரிப்பிலும் ஈடுபட்டு வந்தார். அவர் தயாரிப்பில் வெளியாகி பெரும் வெற்றிபெற்ற படம் ’உலகம் சுற்றும் வாலிபன்’. இந்த படத்தை போல ‘கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு’ என்ற படத்தை பிரம்மாண்டமாக தயாரித்து, அதில் நடிக்க திட்டமிட்டிருந்தார் எம்.ஜி.ஆர். ஆனால் அவருடைய கனவு நனவாகவில்லை. இப்போது எம்.ஜி.ஆரின் கனவை நிஜமாக்கும் விதமாக ‘கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு’ படத்தை ஐசரி கணேஷ் தயாரிக்க முன் வந்துள்ளார்.

அனிமேஷன் தொழில்நுட்பத்தில் எம்.ஜி.ஆர்.நடிக்கும் இந்த படத்தின் பூஜை நாளை மாலை சென்னையிலுள்ள சத்யா ஸ்டுடியோவில் நடைபெறவிருக்கிறது. இந்நிகழ்ச்சியில் எம்.ஜி.ஆருடன் நடித்த நடிகர், நடிகைகள், பணியாற்றிய தொழில் நுட்ப கலைஞர்கள் உட்பட ஏராளமான திரையுலக பிரபலங்கள் கலந்துகொள்ளவிருக்கிறார்கள். இந்த படத்தின் அனிமேஷன் மற்றும் கதை, திரைக்கதை, இயக்கம் ஆகிய பொறுப்புக்களை எம்.அருள்மூர்த்தி ஏற்றுள்ளார். இந்த படத்திற்கான பாடல்களை வைரமுத்து எழுதுகிறார். டி.இமான் இசை அமைக்கிறார். படத்தொகுப்பை ஆண்டனி கவனிக்க, நடனங்களை ராஜு சுந்தரம் அமைக்கிறார். சண்டை காட்சிகளை ராக்கி ராஜேஷ் அமைக்கிறார். இந்த படத்தை ‘வேல்ஸ் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல்’ நிறுவனம் சார்பில் ஐசரி கே. கணேஷும், பிரபுதேவாவும் இணைந்து தயாரிக்கிறார்கள். இந்த படம் மிகப் பிரம்மாண்டமான முறையில் உருவாகவிருக்கிறது. இந்த படத்தை அடுத்த ஆண்டு (2019) ஜனவரி 17-ஆம் தேதி எம்.ஜி.ஆர்.பிறந்த நாள் அன்று வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.

#MGR #UlagamSuttrumValiban #KizhakkuAaprikaavilRaju #IsariGanesh

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

வாலு - தாறுமாறு பாடல் வீடியோ


;