‘நாடோடிகள்-2’ அதிகாரபூர்வ தகவல்கள்!

சமுத்திரக்கனி, சசிக்குமார் இணையும் ‘நாடோடிகள்-2’ அதிகாரபூர்வ தகவல்கள்!

செய்திகள் 16-Jan-2018 10:41 AM IST VRC கருத்துக்கள்

இரண்டாம் பாக வரிசையில் சமுத்திரக்கனி, சசிக்குமார் இணைந்து உருவாக்கிய ‘நாடோடிகள்’ திரைப்படத்தின் இரண்டாம் பாகமும் உருவாகவிருக்கிறது என்ற தகவலை ஒரு சில நாட்களுக்கு முன் வெளியிட்டிருந்தோம். இப்போது இந்த படம் குறித்த அதிகாரபூர்வ தகவல்களை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

‘நாடோடிகள்-2’ இரண்டாம் பாகத்தை ‘நாடோடிகள்’ மற்றும் ‘இன்ஸ்பைர் என்டர்டெயின்மெண்ட்’ ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கிறது. இந்த படத்தை சமுத்திரக்கனி இயக்க, சசிகுமாரே கதாநாயகனாக நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விரவிவில் துவங்கவிருக்கிறது. இந்த படத்திற்கு ஜஸ்டின் பிரபாகர் இசை அமைக்கிறார். என்.கே.ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்கிறார். கலை இயக்கத்தை ஜாக்கி கவனிக்க, படத்தொகுப்பை ஏ.எல். ரமேஷ் செய்கிறார். இந்த படத்திற்கான மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்களுக்கான தேர்வு வரும் நிலையில் இந்த படத்தில் நடிக்க அஞ்சலி, அதுல்யா ஆகியோரிடம் பேச்சு வார்த்தைகள் நடந்து வருகிறது என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

#Nadodigal #Samuthirakani #Nadodigal2 #Sasikumar #NadodigalProductions #JustinPrabhakaran #Ekambaram

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மதுரவீரன் - கொம்புள கொம்புள பாடல் வீடியோ


;