‘பாகுபலி’ புகழ் விஜயேந்திர பிரசாத் கதையில் ராகவா லாரன்ஸ் நடிக்கும் இருமொழி படம்!

‘பாகுபலி’ பட புகழ் விஜயேந்திர பிரசாத்துடன் கூட்டணி அமைக்கும் ராகவா லாரன்ஸ், மதன் கார்க்கி!

செய்திகள் 16-Jan-2018 10:26 AM IST VRC கருத்துக்கள்

பெரும் வசூல் குவித்த ‘பாகுபலி’ படத்தின் கதையை எழுதியவர் விஜயேந்திர பிரசாத்! இந்த படத்தை தொடர்ந்து விஜய்யின் ‘மெர்சல்’ படத்திலும் பணியாற்றினார் விஜயேந்திர பிரசாத்! இந்த படங்களை தொடர்ந்து ராகவா லாரன்ஸ் நடிக்கும் படத்திற்கு கதை எழுதுகிறார் விஜயேந்திர பிரசாந்த். இந்த படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகிறது. இந்த படத்தை தமிழில் பல படங்களை தயாரித்துள்ள ‘கேமியோ ஃபிலிம்ஸ்’ நிறுவனம் தயாரிக்கிறது. மகாதேவ் என்பவர் இயக்குகிறார். விஜயேந்திர பிரசாதின் கதைக்கு மதன் கார்க்கி வசனங்களை எழுதுகிறார். இந்த தகவல்களை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ள ‘கேமியோ ஃபிலிம்ஸ்’ நிறுவனத்தினர் இந்த படம் குறித்த மற்ற தகவல்களை விரைவில் வெளியிடவிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்கள்.

#Baahubali #VijayendraPrasad #SSRajamouli #Mersal #Vijay #Mahadev #MadanKarky

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

காளி முதல் 7 நிமிடங்கள்


;