கோடை விடுமுறையில் ‘கடைக்குட்டி சிங்கம்’

பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் படத்திற்கு ‘கடைக்குட்டி சிங்கம்’ என்று பெயரிடப்பட்டுள்ளது!

செய்திகள் 16-Jan-2018 10:18 AM IST VRC கருத்துக்கள்

பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்து வரும் படத்துக்கு ‘கடைக்குட்டி சிங்கம்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இதன் ஃபஸ்ட் லுக் போஸ்டரை சூர்யா வெளியிட்டார். ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தை தொடர்ந்து கார்த்தி நடிக்கும் இந்த படத்தை சூர்யாவின் ‘2D என்டர்டெயின்மென்ட்’ நிறுவனம் தயாரிக்கிறது. இதன் முதல்கட்ட படப்பிடிப்பு தென்காசியை சுற்றியுள்ள பகுதிகளில் நடந்து முடிந்துள்ளது. இந்த படத்தில் கார்த்தியுடன் சாயிஷா கதாநாயகியாக நடிக்க, சத்யராஜ், சூரி, ப்ரியா பவானி சங்கர், மௌனிகா, ஸ்ரீமன், பானுப்ரியா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

‘கடைக்குட்டி சிங்கம்’ போஸ்டரில் ‘பயிர் செய்ய விரும்பு’ என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது. இதனால் இந்த படத்தின் கதை விவசாயத்தை வலியுறுத்தும் கதையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வருகிற கோடை விடுமுறைக்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ள இந்த படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்ய, டி.இமான் இசை அமைக்கிறார். கார்த்தி நடிக்கும் படத்திற்கு டி.இமான் இசை அமைப்பது இதுவே முதல் முறை!

#ThaanaSerndhaKoottam #Suriya #Karthi #KadaikuttySingam #Sayyeshaa #Pandiraj #ChinnaBabu

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கைதி டீஸர்


;