‘சங்கமித்ரா’ கைவிடப்பட்டதா?

‘சங்கமித்ரா’வின் படப்பிடிப்பு ஏப்ரல் அல்லது மே மாதம் துவங்கும்! - சுந்தர்.சி

செய்திகள் 12-Jan-2018 12:58 PM IST Top 10 கருத்துக்கள்

சுந்தர்.சி.இயக்கத்தில் ஜெய், ஜீவா, ‘மிர்ச்சி’ சிவா, நிக்கி கல்ராணி, கேத்ரின் தெரெசா முதலானோர் நடிக்கும் ‘கலகலப்பு-2’ படத்தின் பத்திரைகையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது. அப்போது இயக்குனர் சுந்தர்.சி.யிடம் ‘சங்கமித்ரா’ கைவிடப்பட்டதா என்று கேட்டபோது,

‘‘சங்கமித்ரா’வை கைவிடவில்லை. நிச்சயம் அந்த கதையை இயக்குவேன். அதற்கான ப்ரீ-புரொடக்‌ஷன் வேலைகள் இப்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ‘சங்கமித்ரா’ பெரிய பட்ஜெட் படம் என்பதாலும், டெக்னிக்கல் விஷயங்களுக்கு அதிக முக்கியத்துவம் உள்ள படம் என்பதாலும் அது சம்பந்தமான வேலைகள் இன்னும் தொடந்து நடந்து கொண்டிருக்கிறது. படப் பிடிப்புக்கு போவதற்கு முன்னாடி செய்து முடிக்க வேண்டிய கிராஃபிக்ஸ் வேலைகளே நிறைய இருக்கிறது. இது போன்ற காரணங்களால் தான் படப்பிடிப்பு தாமதமாகிறது. இந்த வேலைகள் அனைத்தும் வரும் ஏப்ரல் மாதத்திற்குள் முடிந்து விடும். அநேகமாக ஏப்ரல் அல்லது மே மாதம் ‘சங்கமித்ரா’வின் படப்பிடிப்பு துவங்கும்’ என்றார் சுந்தர்.சி!

#Sangamithra #SundarC #JayamRavi #Arya #Dishapatani #SriThenandalFilms #ARRahman #Kalakalappu2 #Kalakalppu2PressMeet

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தில்லுக்கு துட்டு 2 டீஸர் 02


;