பாக்யராஜ், மன்சூரலிகானுடன் 4500 துணை நடிகர்கள் நடிக்கும் படம்!

பின்னணிப் பாடகர் மனோவின் மகன் ரத்தீஷ் கதாநாயகனாக நடிக்கும்  ‘கிள்ம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்கய்யா’

செய்திகள் 11-Jan-2018 1:25 PM IST VRC கருத்துக்கள்

‘ஹெவன் என்டர்டெயின்மென்ட்’ நிறுவனம் தயாரித்துள்ள படம் ‘கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்கய்யா’. அறிமுக இயக்குனர் ரசாக் இயக்கியுள்ள இந்த படத்தில் பாக்யராஜ் போலீஸ் அதிகாரியாக நடிக்க, இவருடன் ஆர்.வி.உதயகுமார், ஆர்.சுந்தர்ராஜன், மன்சூரலிகான், அனுமோகன் ராஜ்கபூர், ‘பவர்ஸ்டார்’ சீனிவாசன் நடிக்க, கதாநாயகனாக பின்னணி பாடகர் மனோவின் மகன் ரத்திஷ், கதாநாயகியாக நடிகை இனியாவின் தங்கை தாரா நடித்துள்ளனர். இவர்களுடன் மஸ்காரா, அஸ்மிதா ஆகியோரும் முக்கிய பாத்திரங்களில் நடிக்க 4500 துணை நடிகர்களும் இப்படத்தில் நடித்திருக்கிறார்களாம். இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. அப்போது பாக்யராஜ் பேசும்போது,

‘‘முன்னமே வைக்கப்பட்ட இந்த படத்தின் தலைப்பு இப்போது நடந்துகொண்டிருக்கிற நிஜ சம்பவங்களோடு பொருந்தும் வகையில் இருக்கிறது. காரணம் இப்போது சினிமாவில் இருப்பவர்கள் எல்லாம் அரசியலை நோக்கி கிளம்பிக் கொண்டிருக்கிற காலம். எனவே இந்த படத்தலைப்பு என்னை மிகவும் கவர்ந்தது. அதோடு இந்த படத்தில் நடித்தது மாறுபட்ட ஒரு அனுபவமாக இருந்தது’’ என்றார்.

தனது வழக்கமான ஸ்டைலில் ‘பவர்ஸ்டார்’ சினிவாசன் பேசும்போது, ‘‘முதல் நாள் ஷூட்டிங்கின் போனபோது அங்கே நிறைய போலீஸ் இருந்தார்கள். இங்கேயும் நம்மை கைது செய்ய வந்துவிட்டார்களோ என்று ஒரு நிமிடம் திகைத்து போனேன். சரி, இயக்குனர் நமக்கு என்ன வேஷம் கொடுக்க போறார் என்று பார்த்தார்ல் பொசுக்கென்று முதல் அமைச்சர் வேடம் கொடுத்திட்டார். எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது. இனிமேல் கட்சி ஆரம்பித்து முதல்வர் ஆவது கனவிலும் நடக்காத காரியம். அடுத்த ஜென்மத்திலாவது முதல்வர் ஆவேனா என்று தெரியாது. ஆனால் இந்த படத்தில் முதல் அமைச்சராக வாழ்ந்து பார்த்து விட்டேன். ‘லத்திகா’ படத்தை நான் தான் 100 நாட்கள் ஓட வைத்தேன். அதேபோல இந்த படத்தையும் 100 நாட்கள் ஓட வைப்பேன். ஏனா நான் முதலவராக நடித்த படம் ஜெயித்தே ஆக வேண்டும்’’ என்று பேச விழா அரங்கம் சிரிப்பால் அதிர்ந்தது!

விரைவில் வெளியாகவிருக்கிற் இந்த படத்திற்கு ஸ்ரீகாந்த் இசை அமைக்க, ஒளிப்பதிவை ஸ்ரீதர் கவனித்துள்ளார்.

#KilambitangayyaKilambitangayya #Bhagyaraj #Anumohan #PowerstarSrinivasan #RVUdhayakumar #MansooraliKhan

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பிரம்மாடாட்காம் - டிரைலர் 2


;