அஜித் இயக்குனருடன் இணையும் சிம்பு?

மணிரத்னம் இயக்கும் படத்தை தொடர்ந்து சரண் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் சிம்பு!

செய்திகள் 11-Jan-2018 10:56 AM IST VRC கருத்துக்கள்

‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தை தொடர்ந்து சிம்பு மணிரத்னம் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தில் சிம்பு, விஜய்சேதுபதி, ஃபஹத் ஃபாசில், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோரும் நடிக்க இருக்கிறார்கள். இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவிருக்கிறது. இந்நிலையில் இந்த படம் முடிந்ததும் அஜித் நடிப்பில் காதல் மன்னன், அமர்க்களம், அட்டகாசம், அசல் அகிய படங்களை இயக்கிய சரண் இயக்கத்தில் சிம்பு ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. சரண் இப்போது இந்த படத்திற்கான ஸ்க்ரிப்ட் வேலைகளில் பிசியாக இயங்கி வருகிறார் என்று கூறப்படுகிறது. அதே நேரம் மோகன் ராஜா இயக்கத்திலும் சிம்பு ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார் என்ற தகவலும் கோலிவுட்டில் பேசப்பட்டு வருகிறது. ஆனால் இந்த இரண்டு படங்கள் குறித்த எந்த அதிகார்பூர்வ தகவலும் இதுவரை வெளியாகவில்லை!
#STR #Maniratnam #MohanRaja #Saran #AjithKumar #AnbanavanAsaradhavanAdangadhavan #Simbu

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மரண மட்ட padal


;