சற்குணம் இயக்கத்தில் மாதவன் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார் என்ற தகவலை ஏற்கெனவே வெளியிட்டிருந்தோம். ‘விக்ரம் வேதா’ படத்தை தொடர்ந்து ‘மகளிர் மட்டும்’ படத்தில் கௌர வேடத்தில் நடித்த மாதவன் அடுத்து சற்குணம் இயக்கும் படத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதம் துவங்கவிருக்கிறதாம். இந்த படம் காடுகளில் நடக்கும் கதையை மையப்படுத்திய கதையாம். தாய்லாந்து, மங்கோலியா, தஜிகிஸ்தான் மற்றும் உலகின் பல்வேறு இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடக்கவிருக்கிறதாம். இந்த படத்திற்கு ஜிப்ரான் இசை அமைக்கிறார். சண்டை காட்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் உள்ள கதை இது என்றும் அதனால் இப்படத்தின் சண்டை காட்சிகளை அமைக்க, பிரபல ஹாலிவுட் சண்டை கலைஞர் க்ரே பரிட்ஜ் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கான மற்ற நடிகர் நடிகைகள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்களின் தேர்வு இப்போது நடந்து வருகிறது. இது குறித்த அதிகாரபூர்வ தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Direction: Priya Krishnaswamy Production: Reckless Roses Cast: R Raju, Sukumar Shanmugam, SP...
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா இணைந்து நடித்த படம் ‘நானும் ரௌடிதான்’. இந்த படம்...
அசோக் செல்வன், ரித்விகா சிங் இணைந்து நடிக்கும் படம் ‘ஓ மை கடவுளே’. இந்த படத்தை ஏ.ஆர்.முருகதாஸிடம்...